ADVERTISEMENT

UAE: அரச குடும்பத்தை சார்ந்த ஷேக் தஹ்னூன் மறைவு.. அமீரக ஜனாதிபதி இரங்கல்.. 7 நாள் துக்கம் அனுசரிப்பு..!!

Published: 2 May 2024, 9:13 AM |
Updated: 2 May 2024, 9:40 AM |
Posted By: admin

அபுதாபியின் அரச குடும்பமான அல் நஹ்யான் குடும்பத்தின் உறுப்பினரும், அபுதாபி ஆட்சியாளரின் அல் அய்ன் பிராந்தியத்தின் பிரதிநிதியுமான ஷேக் தஹ்னூன் பின் முகமது அல் நஹ்யான் (Sheikh Tahnoon bin Mohammed Al Nahyan) அவர்கள் நேற்று புதன்கிழமை இரவு (மே 1) மரணமடைந்ததாக அமீரக அரசின் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகமான WAM செய்தி வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அவரின் மறைவிற்கு அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இன்று புதன்கிழமை மே 1 முதல் ஏழு நாட்களுக்கு கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்படும் என ஜனாதிபதி நீதிமன்றமும் அறிவித்துள்ளது.

ஷேக் தஹ்னூன் அவர்களின் மறைவையொட்டி ஜனாதிபதி நீதிமன்றம் பின்வரும் இரங்கல் செய்தியை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் “அல்லாஹ்வின் பெயரால், ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள், இன்று காலமான தனது மாமா, அல் அய்ன் பிராந்திய பிரதிநிதி மாண்புமிகு ஷேக் தஹ்னூன் பின் முகமது அல் நஹ்யான் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களும், ஜனாதிபதி, அல் நஹ்யான் குடும்பத்தினர் மற்றும் அமீரக மக்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் ஷேக் தஹ்னூனின் சாதனைகளையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அதேபோன்று ஷார்ஜாவின் ஆட்சியாளரின் நீதிமன்றமும் ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு இரங்கலை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ஐக்கிய அரபு அமீரக ஸ்தாபக தந்தை மறைந்த ஷேக் சயீத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்

ஷேக் தஹ்னூன் முன்பு அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்தின் (Adnoc) தலைவராகவும், அபுதாபியின் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும் 2018 ஆம் ஆண்டில், துபாய்-அல் அய்ன் சாலை ஷேக் தஹ்னூனின் பெயரில் மறுபெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஷேக் தஹ்னூன் முன்பு அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்தின் (Adnoc) தலைவராகவும், அபுதாபியின் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். சமீபத்திய ஆண்டுகளில், ஷேக் தஹ்னூன் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளில் ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் கலந்து கொண்டிருக்கிறார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel