ஓமானில் ‘ஈத் அல் அதா’ கொண்டாடப்படும் தேதியை அறிவித்த அதிகாரிகள்..!!

இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாத தொடக்கத்தைக் குறிக்கும் பிறை பார்க்குமாறு (ஜூன் 6, வியாழன்) ஓமான் அறிவித்திருந்த நிலையில் இன்று ஓமானில் துல் ஹஜ் மாத பிறை தென்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஜூன் 8, சனிக்கிழமை, இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாதத்தின் முதல் நாளாக இருக்கும் என்று நாட்டின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது ஜூன் 17 ஆம் தேதி திங்கட்கிழமை ஓமானில் ஈத் அல் அதாவின் முதல் நாளாக அனுசரிக்கப்படும் என்றும் ஜூன் 16ம் தேதி அரஃபா தினமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானில் ஜூன் 17 ம் தேதி ஈத் அல் அதா என அறிவிக்கப்பட்டிருக்கும் அதே சமயத்தில் மற்றொரு வளைகுடா நாடான சவூதி அரேபியாவில் இன்று துல் ஹஜ் மாத பிறை தென்பட்டதாகவும் இதனால் ஜூன் 16ம் தேதி ஈத் அல் அதா கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகள் சவூதியையே பின்பற்றும் என்பதால் ஓமானை தவிர மற்ற வளைகுடா நாடுகள் ஒரு நாள் முன்னதாக ஈத் அல் அதாவை கொண்டாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel