அமீரக செய்திகள்

துபாய்: நோல் கார்டை டிஜிட்டல் மயமாக்கி மொபைல் மூலம் கட்டணம் செலுத்துவது எப்படி??

துபாயில் உள்ள அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கும் கட்டணம் செலுத்த பயன்படுத்தப்படும் நோல் கார்டை எப்போதும் உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். ஆனால், மெட்ரோ வாயில்களில் நிற்கும் போதோ அல்லது பேருந்தில் இருந்து இறங்கும் போதோ உங்கள் நோல் கார்டைத் தேடும் போது உங்களுக்கு பதற்றத்தை உண்டாக்கலாம்.

இத்தகைய தேவையில்லாத பதற்றத்தை தவிர்க்க, மொபைலில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நோல் கார்டை ஸ்கேன் செய்து வைத்திருந்தால், உங்கள் ஃபோன் மூலம் எளிதாக பணம் செலுத்தலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் Samsung Gulf Electronics ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இது Samsung மொபைல் வைத்திருக்கும் நபர்களுக்கு சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த செயல்முறையை நீங்கள் முடித்த பிறகு, உங்கள் நோல் கார்டு செயலிழந்து விடும் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.

நோல் கார்டை டிஜிட்டல் மயமாக்குவது எப்படி?

>> முதலில், உங்கள் மொபைலில் Nol Pay செயலியைப் பதிவிறக்கம் வேண்டும். பதிவிறக்கம் செய்ததும், எளிதாக உள்நுழைய உங்கள் UAE Pass பயன்பாட்டுடன் இணைக்கலாம். பிறகு, ‘Get my Nol card’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

>> இப்போது, உங்கள் நோல் கார்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கான விருப்பத்தை காண்பீர்கள். அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். முக்கியமாக, உங்கள் நோல் கார்டு கையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!

>> இதற்குப் பிறகு, உங்கள் நோல் கார்டை ஸ்கேன் செய்வதற்காக உங்கள் மொபைலின் பின்புறத்தில் கார்டை வைத்திருக்குமாறு உங்களுக்குத் தெரிவிக்கப்படும். செயல்முறை முடியும் வரை அதே இடத்தில் வைத்திருப்பதை உறுதிசெய்யவும்.

>> அதன்பின், உங்கள் மொபைலுக்குப் பின்னால் உள்ள கார்டை அகற்றும்படி ஆப்ஸ் உங்களை வழிநடத்தும். முழு செயல்முறையும் முடிந்து உங்கள் கார்டு டிஜிட்டல் மயமாக்கப்படுவதற்கு சில நிமிடங்கள் ஆகலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!