தனியார்துறை ஊழியர்களுக்கு 4 நாள் விடுமுறையை அறிவித்த சவுதி அரேபியா..!!
சவூதி அரேபிய அரசாங்கம் ஈத் அல் அதா பண்டிகையைக் கொண்டாட ராஜ்ஜியத்தில் உள்ள தனியார் மற்றும் இலாப நோக்கற்ற துறை ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது. அதன்படி, ஊழியர்கள் வருகிற ஜூன் 15, 2024 முதல் விடுமுறையை அனுபவிக்கலாம்.
ஜூன் 6ம் தேதி வானில் பிறையை பார்க்க சவுதி அரேபியா அழைப்பு விடுத்திருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று வானில் பிறை நிலவு காணப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்தனர். இது இஸ்லாமிய மாதமான துல் ஹஜ், ஜூன் 7 ஆம் தேதி தொடங்குகிறது என்பதைக் குறிக்கிறது.
சவுதி அரேபியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளும் ஜூன் 6ம் தேதி அன்று பிறை நிலவு வானில் தென்பட்டதை தொடர்ந்து ஜூன் 7ம் தேதி வெள்ளிக்கிழமை துல் ஹஜ் மாதத்தின் முதல் நாள் என அறிவிப்பு வெளியிட்டது.
அதனடிப்படையில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பெரும்பாலான அரபு நாடுகள் ஈத் அல் அதாவின் முதல் நாளை ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடவுள்ளது. எனினும் ஓமானில் மட்டும் ஜூன் 17ம் தேதி திங்கள்கிழமை ஈத் அல் அதாவின் முதல் நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel