அமீரக செய்திகள்

UAE: பயணத்தடை விதிக்கப்பட்டால் இனி தானாகவே ரத்து செய்யப்படும்..!! அமீரகத்தின் நீதி அமைச்சகம் அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணத்தடை விதிக்கப்பட்டவர்கள் மீண்டும் நாட்டிற்குள் நுழைவதற்கு, அவர்கள் மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்க வேண்டி விண்ணப்பிக்க வேண்டும் என்பது இவ்வளவு காலமும் அமீரகத்தில் நடைமுறையில் இருந்து வரும் விதிமுறை ஆகும்.

ஆனால் தற்போது அதற்காக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் பயணத்தடை விதிக்கப்பட்டதற்கான வழக்குகள் தீர்க்கப்பட்டவுடன் இந்த செயல்முறை தானாகவே செய்யப்படும் என அமீரகத்தின் நீதி அமைச்சகம் (MoJ) அதன் சமீபத்திய ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

அதாவது, ஒருவரின் பயணத் தடையை நீக்குவதற்குத் தேவையான நடைமுறைகள் ஒன்பதில் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் ஒரு வீடியோ பதிவில் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, பயணத்தடையை ரத்து செய்வதற்கு அரசின் அனுமதி மற்றும் சில ஆதார ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் இது குறித்து வெறியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அமீரகத்தின் நீதி அமைச்சகம் உடனடியாக பயணத் தடை நீக்க உத்தரவின் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும், இதற்கான செயலாக்க நேரம் ஒரு வேலை நாளிலிருந்து சில நிமிடங்களாக குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமீரக அரசின் ஜீரோ அரசு அதிகாரத்துவ திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ள இந்த முன்முயற்சியானது, அதிகாரத்துவ தடைகளை அகற்றுவதன் மூலம் மத்திய அரசு சேவைகளின் செயல்திறனை உயர்த்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், அபுதாபி மற்றும் துபாயில் உள்ள இரண்டு நீதித்துறை அதிகாரிகளும் அமீரக குடியிருப்பாளர்களின் நிலுவையில் உள்ள அபராதங்கள் தீர்க்கப்பட்டவுடன் அவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடைகளை ரத்து செய்வதை தானியங்குபடுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!