துபாய்: முதல் முறையாக பெயரிடும் உரிமையை வழங்கிய உலகின் முதல் பெட்ரோல் நிலையம்!!
துபாயில் உள்ள சில நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு துபாய் மெட்ரோ நிலையங்களுக்கு பெயரிடும் உரிமையைப் பெற்றுள்ளதால் எமிரேட்டில் உள்ள சில மெட்ரோ நிலையங்கள் அந்த குறிப்பிட்ட நிறுவனங்களின் பெயர் வைத்து அழைக்கப்படுகின்றன.
இது துபாய்வாசிகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அதில் புதிதாக தற்பொழுது துபாயில் உள்ள சில பெட்ரோல் நிலையங்களும் அதன் முதல்-வகையான முன்முயற்சியாக வணிகங்களிடம் பெயரிடும் உரிமையைக் கொடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன.
அதாவது, எமராட் எனப்படும் எமிரேட்ஸ் ஜெனரல் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பெட்ரோல் நிலையத்திற்கு பெயரிடும் உரிமையை முதல்முறையாக அல் மர்யா கம்யூனிட்டி பேங்க்கிடம் (Mbank) வழங்கியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் இதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் மூலம் பெயரிடும் உரிமையை வழங்கிய உலகின் முதல் எரிபொருள் நிலையம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.
ஜபீல் பூங்காவிற்கு அருகிலுள்ள ஷேக் கலீஃபா பின் சையத் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள எமராத்தின் ராஜ்ஹான் எரிபொருள் நிலையம் இந்த முறையில் மறுபெயரிடப்பட்ட முதல் நிலையமாகும். மேலும், வெகுவிரைவில் Emarat எரிபொருள் நிலையங்களில் உள்ளூர் ஜெய்வான் கார்டுடன் இணைக்கப்பட்ட Mbank டிஜிட்டல் வாலட் சேவைகள் தொடங்கப்படும் என்றும், இது வாடிக்கையாளர்கள் மொபைல் கட்டண கவுண்டர்களில் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பொருட்களை வாங்கும் தொடர்பு இல்லாத கட்டண பரிவர்த்தனைகளை (contactless payment transaction) மேற்கொள்ள அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு பெயரிடும் உரிமைகளை நிறுவனங்களுக்கு வழங்குவது ஒரு தனித்துவமான விளம்பர வாய்ப்பாகும், இது நிறுவனங்களுக்கு பிரத்யேக பிராண்டிங் திறனை வழங்குகிறது.
துபாயில் Onpassive, UAE Exchange மற்றும் Danube போன்ற மெட்ரோ நிலையங்களுக்கு பெயரிடும் உரிமைகளைப் போன்றே இந்த பெட்ரோல் நிலையங்களின் பெயரிடும் உரிமையும் வந்துள்ளது. சமீபத்தில் துபாய் மஷ்ரெக் மெட்ரோ நிலையத்திற்கு கூட InsuranceMarket நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு இந்த பெயர் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel