அமீரக செய்திகள்

துபாய்: இப்போது ஒரு சில வினாடிகளிலேயே டாக்ஸியை முன்பதிவு செய்யலாம்..!! எப்படி…??

துபாயில் டாக்ஸியை முன்பதிவு செய்ய இப்போது அதற்கான ஆப்ஸை பதிவிறக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக நீங்கள் இப்போது வாட்ஸ்அப்பை பயன்படுத்தி ஒரு ஹாலா டாக்ஸியை எளிதாக முன்பதிவு செய்யலாம்.

வாட்ஸ்அப் வழியாக ஹாலா டாக்ஸியை முன்பதிவு செய்வது எப்படி?

  • முதலில் ஹாலா வாட்ஸ்அப் எண்ணை உங்கள் மொபைலில் save செய்து வைத்திருக்கவும் – 800 ஹாலடாக்ஸி (4252-8294)
  • உங்கள் வாட்ஸ்அப் எண் UAE எண்ணாக இல்லாவிட்டால், அந்த எண்ணை save செய்வதற்கு முன், நாட்டின் குறியீடு 971ஐச் சேர்க்க வேண்டியிருக்கும்.
  • பின்னர், வாட்ஸ்அப் சாட்டில் அந்த எண்ணிற்கு ‘Hi’ என்று மெஸ்சேஜ் அனுப்பவும், இப்போது உங்கள் பிக்-அப் இடத்தைப் பகிரும் விருப்பத்துடன் ஒரு செய்தியைப் பெறுவீர்கள்.
  • அடுத்ததாக, நீங்கள் சேர வேண்டிய இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இதையடுத்து, நீங்கள் பிக் அப் அண்ட் டிராப் ஆப்ஷன்கள், டாக்ஸியைப் பெறுவதற்கான மதிப்பிடப்பட்ட நேரம் மற்றும் மதிப்பிடப்பட்ட பயணக் கட்டணம் ஆகியவற்றைக் கொண்ட செய்தியைப் பெறுவீர்கள்.
  • மேலும், உங்கள் பயணத்தை முன்பதிவு செய்யும் எந்த நேரத்திலும் உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், ‘Help’ என தட்டச்சு செய்து, உங்களுக்குத் தேவையான உதவியைப் பெற அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
  • இறுதியாக, உங்கள் பயணத்திற்கான பணத்தை கிரெடிட்/டெபிட் கார்டுகள் அல்லது Apple Pay மூலம் பணம் செலுத்தவும்.
  • பிறகு, உங்கள் பயணத்தின் முடிவில் ஹலா சவாரிக்கான ரசீதை வாட்ஸ்அப் சாட்டில் பெறுவீர்கள்.

​​வாட்ஸ்அப்பில் எந்த வகையான டாக்ஸிகளை முன்பதிவு செய்யலாம்?

இந்த சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது, ​​வாட்ஸ்அப் சேவை மூலம் அதிகபட்சமாக நான்கு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய டாக்ஸிகள் மட்டுமே உள்ளன. ஆகவே, நீங்கள் ஒரு பெரிய காரை முன்பதிவு செய்ய விரும்பினால், நீங்கள் Careem அப்ளிகேஷனை பயன்படுத்த வேண்டும்.

ஏதேனும் காரணத்திற்காக நீங்கள் ரத்து செய்ய முடிவு செய்தால், உங்களுக்கு ஐந்து நிமிடங்கள் சலுகை காலம் உள்ளது. முன்பதிவு தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் ரத்து செய்ய முடிவு செய்தால், உங்களிடமிருந்து 12 திர்ஹம்ஸ் ரத்து கட்டணம் வசூலிக்கப்படும். அடுத்த முறை நீங்கள் ஹாலா டாக்ஸியை முன்பதிவு செய்யும் போது, ​​இது உங்கள் பில்லில் நிலுவையில் இருக்கும் தொகையாக சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!