அபுதாபியில் 24 மணி நேர பார்க்கிங் மண்டலங்களை கண்டறிவது எப்படி? முழுவிபரம் உள்ளே…
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உங்கள் வீடு அல்லது அலுவலகத்திற்கு அருகில் உள்ள 24 மணி நேர பார்க்கிங் இடத்தை கண்டறிவது சிரமமாக உள்ளதா? அபுதாபியில் 24 மணிநேர பார்க்கிங் மண்டலங்களை எவ்வாறு கண்டறிவது, பார்க்கிங் கட்டணங்கள் மற்றும் பொது பார்க்கிங்கிற்கு எவ்வாறு பணம் செலுத்துவது போன்ற முழு விபரங்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
அபுதாபியின் கட்டண பார்க்கிங் அமைப்பான மவாகிஃப் (Mawaqif), பார்க்கிங் அபராதம் அல்லது கால நீட்டிப்புகளைப் பற்றி கவலைப்படாமல் 24 மணிநேரம் வரை காரை நிறுத்த அனுமதிக்க்கூடிய நியமிக்கப்பட்ட பார்க்கிங் இடங்களை வழங்குகிறது.
24 மணி நேர பார்க்கிங் மண்டலங்களை கண்டறிவது எப்படி?
முதலில் கர்ப் சைடின் (curb side) நிறத்தைச் சரிபார்க்க வேண்டும். கருப்பு மற்றும் நீல நிறத்தில் வரையப்பட்ட ஒரு கர்ப் நீங்கள் 24 மணிநேரம் வரை பார்க்கிங் செய்யலாம் என்பதைக் குறிக்கிறது. இந்த வகை பார்க்கிங் எமிரேட்டில் நிலையான பார்க்கிங் (standard parking) என்று அழைக்கப்படுகிறது.
அதேபோல், பிரீமியம் பார்க்கிங் பகுதிகள் நீலம் மற்றும் வெள்ளை கர்ப்களால் குறிக்கப்படுகின்றன, இங்கு அதிகபட்சம் நான்கு மணிநேரம் வரை பார்க்கிங் செய்ய அனுமதிக்கபப்டுகிறது.
நிலையான பார்க்கிங் கட்டணம்
- ஒரு மணி நேரத்திற்கு 2 திர்ஹம்ஸ்
- நாள் முழுவதும் 15 திர்ஹம்ஸ்
நிலையான பார்க்கிங் நேரம்: காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை (ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் பார்க்கிங் இலவசம்).
அபுதாபியில் பொது பார்க்கிங்கிற்கு எப்படி பணம் செலுத்துவது?
1. Mawaqif இயந்திரங்கள்
- உங்களுக்கு விருப்பமான மொழியாக அரபு அல்லது ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- டிக்கெட் வகையைத் தேர்வு செய்யவும்: நிலையான அல்லது பிரீமியம்.
- உங்கள் வாகனத்தின் ப்ளேட் நம்பர் மற்றும் குறியீட்டை (code) உள்ளிடவும்.
- பார்க்கிங் காலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் பேமண்ட் முறையைத் தேர்வுசெய்யவும்: பணம், மவாகிஃப் கார்டு (பொது பார்க்கிங்கிற்கான ரிச்சார்ஜபிள் கார்டு), அல்லது கிரெடிட்/டெபிட் கார்டு.
- திரையில் உங்கள் கட்டணத்தை உறுதிப்படுத்தவும். கட்டணம் தானாகவே உங்கள் வாகனத்துடன் இணைக்கப்படும்.
2. TAMM மொபைல் ஆப்
- உங்கள் மொபைலில் TAMM அப்ளிகேஷனை திறந்து, உங்களின் UAE PASS மூலம் உள்நுழைந்து, முகப்புப் பக்கத்தில் ‘Pay for Parking’ என்ற விருப்பத்தைப் பார்க்கும் வரை கீழே ஸ்க்ரோல் செய்யவும்.
- உங்கள் வாகனத்தின் உரிமத் தகடு மற்றும் கார் மாடலை உள்ளிட்டு, ‘Add Vehicle.’ என்பதைத் கிளிக் செய்யவும்.
- பார்க்கிங் வகையைத் தேர்ந்தெடுக்கவும்: நிலையான (கருப்பு மற்றும் நீலம்) அல்லது பிரீமியம் (நீலம் மற்றும் வெள்ளை).
- அதன்பிறகு, ஒரு மணிநேரம் முதல் 24 மணிநேரம் வரை பார்க்கிங் நேரத்தை தேர்வு செய்யவும்.
- இறுதியாக, ‘Send SMS’ என்பதைத் தட்டவும். ஆப்ஸ் தானாகவே உங்கள் தட்டு எண் மற்றும் கால அளவுடன் 3009க்கு SMS அனுப்பும். பார்க்கிங் கட்டணம் உங்கள் மொபைல் இருப்பில் இருந்து கழிக்கப்படும்.
3. mParking – SMS:
உங்கள் மொபைலில் இருந்து பின்வரும் வடிவமைப்பில் 3009 க்கு SMS அனுப்பவும்: நகரம் மற்றும் தட்டுக் குறியீடு, தட்டு எண், பார்க்கிங் வகை (பிரீமியம் அல்லது தரநிலை), காலம் (மணிநேரங்களில்). எடுத்துக்காட்டாக: DXBC 12345 S 1 (நிலையான பார்க்கிங்குக்கு S, பிரீமியத்திற்கு P).
மல்டி ஸ்டோரீ பார்க்கிங்
உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் நிலையான வாகன நிறுத்துமிடத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியாவிட்டால் அல்லது அது எப்போதும் நிரம்பியிருந்தால், நீங்கள் பல அடுக்கு பார்க்கிங் வசதிகளைப் பயன்படுத்தலாம். இவை 24 மணி நேர பார்க்கிங்கிற்கு வசதியான மாற்றாக இருக்கும். நீங்கள் ஒரு மணிநேர கட்டணத்தை செலுத்தலாம் அல்லது நீண்ட கால பயன்பாட்டிற்காக சந்தா அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
மல்டி ஸ்டோரீ பார்க்கிங் கட்டணம்:
- ஒரு மணி நேரத்திற்கு 2 திர்ஹம்ஸ்
- நாள் ஒன்றுக்கு 15 திர்ஹம்ஸ்
- மூன்று மாதங்களுக்கு 1,369 திர்ஹம்ஸ்
- ஆறு மாதங்களுக்கு 2,738 திர்ஹம்ஸ்
- ஒரு வருடத்திற்கு 5,475 திர்ஹம்ஸ்
அபுதாபியில் மல்டி ஸ்டோரீ பார்க்கிங் இடங்கள்:
- ஷேக் ஹம்தான் பின் முகமது – LIWA சென்டருக்குப் பின்னால்
- ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான் – ஃபைனான்சியல் டிபார்ட்மென்ட்டிற்கு பின்னால்
- ஷேக்கா பாத்திமா பின்ட் முபாரக் தெரு – ஜாகர் ஹோட்டலுக்குப் பின்புறம்
- ஷேக் ஹம்தான் பின் முகமது – பஹ்ரைன் வங்கியின் பின்புறம்
- அல் லுலு ஸ்ட்ரீட் – அஹாலியா மருத்துவமனைக்கு பின்புறம்
- ஷேக் கலீஃபா பின் சையத் பர்ஸ்ட் ஸ்ட்ரீட் – அல் மஷ்ரெக் வங்கியின் பின்புறம்
- அல் டானா மல்ட்டி ஸ்டோரி கார் பார்க் – எமிரேட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி முன்
- மல்ட்டி ஸ்டோரி பில்டிங் – பிரிவு 8, காய்கறி மற்றும் இறைச்சி சந்தைக்கு அடுத்ததாக, கோல்ட் சூக் மற்றும் பஸ் நிலையம்
சந்தா அனுமதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
TAMM இணையதளம் அல்லது ஆப்ஸ் மூலம் ஆன்லைனில் மல்டி ஸ்டோரீ பார்க்கிங் சந்தாவிற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
- முதலில் tamm.abudhabi ஐப் பார்வையிடவும் மற்றும் முகப்புப்பக்கத்தில் ‘Vehicles and Transportation’ வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதன்பிறகு, பார்க்கிங் பகுதிக்குச் சென்று, ‘Apply for Multi-Storey Parking.’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இந்த சேவையை அணுக உங்கள் UAE Pass கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- அனுமதி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் போன்றவற்றில் நீங்கள் விரும்பும் சந்தா காலத்தை தேர்வு செய்யவும்.
- நீங்கள் குடியிருப்பாளராக இருந்தால், அருகிலுள்ள மல்டி ஸ்டோரீ பார்க்கிங் இடத்தின் எண்ணை உள்ளிடவும். நீங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்தால், அருகிலுள்ள பார்க்கிங் மண்டலத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் நிறுவனத்தின் குத்தகை ஒப்பந்த எண்ணை வழங்கவும். பணியாளர்கள் தங்கள் நிறுவனத்திடமிருந்து ஒரு ‘No Objection Certificate’ ஐ பதிவேற்ற வேண்டும்.
- அடுத்தபடியாக, ட்ராஃபிக் குறியீடு எண், கார் மாடல் மற்றும் ப்ளேட் நம்பர் போன்ற உங்கள் வாகன விவரங்களை உள்ளிடவும்.
- உங்கள் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டதும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி அனுமதிக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துங்கள்.
- பணம் செலுத்திய பிறகு, அனுமதியின் டிஜிட்டல் பதிப்பை TAMM இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel