அமீரக செய்திகள்

துபாய்: பெயர் மாற்றம் செய்யப்பட்ட ‘மஷ்ரெக் மெட்ரோ ஸ்டேஷன்’..!! புதிய பெயரை அறிவித்த RTA..!!

துபாயில் உள்ள மஷ்ரெக் மெட்ரோ நிலையம் இனி இன்சூரன்ஸ் மார்க்கெட் மெட்ரோ நிலையம் என்று அழைக்கப்படும் என்றும், இந்த மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர் 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

ஆகவே, மெட்ரோ நிலையத்தின் புதிய பெயர் மாற்றத்தைக் கவனிக்குமாறு பயணிகளை RTA கேட்டுக் கொண்டுள்ளது. இது தவிர, மெட்ரோ பயனர்கள் ரயில் நிலையங்களில் உள்ள RTA குழுக்களிடம் ஏதேனும் உதவி அல்லது விளக்கத்தை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஷேக் சையத் சாலையில் முக்கிய இடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், மால் ஆஃப் தி எமிரேட்ஸ் மற்றும் துபாய் இன்டர்நெட் சிட்டி மெட்ரோ நிலையங்களுக்கு இடையே ரெட் லைனில் உள்ளது.

மேலும், இந்த மெட்ரோ நிலையத்தின் வெளிப்புறத்தில் அடையாளங்களையும் ஆணையம் முழுமையாக மாற்றியுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான புதுப்பித்தல் காலத்தில் மெட்ரோ ரயில்களில் ஆடியோ அறிவிப்பு உட்பட, பொது போக்குவரத்து நெட்வொர்க்கின் ஸ்மார்ட் மற்றும் எலக்ட்ரானிக் அமைப்புகளும் புதுப்பிக்கப்படும் என்று RTA கூறியுள்ளது. இந்த பெயர் மாற்றம் RTA மற்றும் InsuranceMarket.ae இடையேயான கூட்டாண்மை மூலம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து InsuranceMarket.ae இன் நிறுவனர் & CEO, அவினாஷ் பாபர் பேசிய போது, மெட்ரோ நிலையத்திற்கு பெயரிடும் உரிமையை வழங்கியதற்கு பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், InsuranceMarket க்கு அர்ப்பணிக்கப்பட்ட துபாயின் சின்னமான மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒன்றைக் கொண்டிருப்பது நிறுவனத்தின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் துபாய்வாசிகள் மற்றும் பார்வையாளர்கள் இருவருக்கும் இந்த ஒத்துழைப்பு ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தை காண்பதற்கு எதிர்நோக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனியார் துறையுடன் கூட்டாண்மை:

துபாயில் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதில் தனியார் துறையுடனான வெற்றிகரமான கூட்டாண்மையின் ஒரு பகுதியாக மெட்ரோ நிலையங்களுக்கு நிறுவனங்களின் பெயர்கள் சூட்டப்படுவதாக RTA இன் ரயில் ஏஜென்சியின் CEO அப்துல் மொஹ்சென் இப்ராஹிம் கல்பட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், InsuranceMarket.ae உடனான ஒத்துழைப்பு வெற்றிகரமான அரசாங்க-தனியார் கூட்டாண்மைக்கு ஒரு முன்மாதிரியாக செயல்படுவதாகவும், RTAவின் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளில் இருந்து பயனடைவதற்கும், பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதவதற்கும் மற்றும் இது தொடர்பான அரசாங்கத்தின் வழிகாட்டுதலை ஆதரிக்க தனியார் துறைக்கு வழிவகை செய்வதற்கும் பங்களிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த கூட்டாண்மை நடவடிக்கை மூலம், முக்கிய நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு தங்கள் பிராண்டுகளை காட்சிப்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் துபாய் ஒரு சிறந்த தளத்தை வழங்குவதாகவும், துபாய் மெட்ரோ நிலையங்கள் UAE மற்றும் பிராந்தியத்தில் உள்ள நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தனித்துவமான மற்றும் மேம்பட்ட விளம்பர வாய்ப்பை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பல்வேறு பொருளாதார மற்றும் வணிகத் துறைகளில் தங்கள் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தீர்வுகளை மார்க்கெட்டிங் செய்ய முடியும், இது உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துதல், துபாய் மற்றும் UAEயில் அவர்களின் வணிகங்களை வளர்ப்பது மற்றும் சர்வதேச சந்தைகளில் விரிவுபடுத்துதல் போன்ற அவர்களின் இலக்குகளுடன் ஒத்துப்போவதாகவும் கல்பட் விவரித்துள்ளார்.

துபாய் மெட்ரோவுக்கு பெயரிடும் உரிமை 2009 முதல் நடைமுறையில் உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் கூட, அல் சஃபா மெட்ரோ நிலையம் ஆன்பாஸிவ் மெட்ரோ நிலையம் என மறுபெயரிடப்பட்டது. அதேபோல், 2021 ஆம் ஆண்டில், துபாய் மெரினா மெட்ரோ நிலையம் சோபா ரியாலிட்டி மெட்ரோ நிலையம் என மறுபெயரிடப்பட்டது, அல் ஜாஃப்லியா நிலையத்திற்கு ‘மேக்ஸ் ஃபேஷன்’ என்று பெயர் சூட்டப்பட்டது மற்றும் அல் ரஷ்தியா நிலையம் ‘சென்டர்பாயின்ட்’ ஆக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அந்த வகையில், ரெட் லைனில் உள்ள பல மெட்ரோ நிலையங்களும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், GGICO மற்றும் அபுதாபி கமர்ஷியல் வங்கி (முன்பு அல் கராமா நிலையம்) உள்ளிட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பெயரால்  பெயரிடப்பட்டுள்ளன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!