அமீரக செய்திகள்

UAE: சாலைகளில் போக்குவரத்து மீறல்களைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட் மானிட்டரிங் சிஸ்டம்!! அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என அஜ்மான் அறிவிப்பு…

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமலில் இருந்தாலும் சில பொறுப்பற்ற ஓட்டுநர்கள் சாலை விதிகளை முறையாகக் கடைபிடிப்பதில்லை. போக்குவரத்து அதிகாரிகளும் வாகனம் ஓட்டும்போது மொபைல் ஃபோன் பயன்படுத்துவது, சீட் பெல்ட் அணியாமல் செல்வது எனப் பல்வேறு சாலை விதிகளை மீறுபவர்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அஜ்மான் எமிரேட்டில் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்டறியும் ஸ்மார்ட் கண்காணிப்பு அமைப்பு (smart monitoring system) அக்டோபர் 1 முதல் செயல்படுத்தப்படும் என்று அஜ்மான் காவல்துறை புதன்கிழமை அறிவித்துள்ளது.

அமீரகத்தின் மத்திய போக்குவரத்து சட்டத்தின் படி, வாகனம் ஓட்டும் போது தொலைபேசி பயன்படுத்துவது அல்லது கவனத்தைச் சிதறடிக்கும் வேறு ஏதேனும் சாதனங்களைப் பயன்படுத்துவது போன்ற குற்றங்களுக்கு 400 திர்ஹம் அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் நான்கு ப்ளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படும்.

அதேபோல், காரில் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் உட்பட அனைத்து பயணிகளும்  சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும், தவறினால் ஓட்டுநருக்கு 400 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு ப்ளாக் பாயிண்ட்கள் வழங்கப்படும் என்றும் போக்குவரத்து சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, போக்குவரத்து விதிகள் மற்றும் நடைமுறைகளை குடியிருப்பாளர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அஜ்மான் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!