துபாய்: அடுத்த ஆண்டு வரையிலும் அல் மக்தூம் பிரிட்ஜ் முழு செயல்பாட்டிற்கு திரும்பாது.. RTA அறிவிப்பு..!!
துபாயில் உள்ள முக்கிய பாலங்களில் ஒன்றான அல் மக்தூம் பிரிட்ஜில் பரமாரிப்பு பணிகள் நடைபெறுவதால், வரக்கூடிய 2025 ஜனவரி 16 வரையிலும் பகுதி நேரம் மட்டுமே இந்த பாலம் செயல்படும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், துபாயின் பிரதான பாலமான அல் மக்தூம் பிரிட்ஜ் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் 24 மணி நேரமும் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.
எனவே, வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை சரியான நேரத்தில் அடைய பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறும், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வாகன ஓட்டிகள் பயன்படுத்தக்கூடிய மாற்று வழிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
தேராவிலிருந்து பர் துபாய் வரை:
- பனியாஸ் சாலை, அல் கலீஜ் ஸ்ட்ரீட் மற்றும் கார்னிச் ஸ்ட்ரீட் வழியாக இன்ஃபினிட்டி பிரிட்ஜ்.
- பனியாஸ் சாலை மற்றும் அல் கலீஜ் ஸ்ட்ரீட் வழியாக அல் ஷிந்தகா டனல்.
- பனியாஸ் சாலை மற்றும் ஷேக் ரஷித் சாலை வழியாக அல் கர்ஹூத் பாலம்.
- பனியாஸ் சாலை, ஷேக் ரஷித் சாலை மற்றும் ரெபாட் ஸ்ட்ரீட் வழியாக பிசினஸ் பே கிராசிங் பாலம்.
பர் துபாய் முதல் தேரா வரை:
- தாரிக் பின் ஜியாத் சாலை, காலித் பின் அல் வலீத் சாலை மற்றும் அல் கலீஜ் ஸ்ட்ரீட் வழியாக இன்பினிட்டி பாலம் அல்லது அல் ஷிந்தகா டன்னல்.
- ஓத் மேத்தா சாலை மற்றும் ஷேக் ரஷித் சாலை வழியாக அல் கர்ஹூத் பாலம்.
- ஓத் மேத்தா மற்றும் அல் கைல் சாலை துபாய் வழியாக பிசினஸ் பே கிராசிங் பாலம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel