துபாய் போக்குவரத்து அபராதம்.. ரேடார் எப்போது வாகனத்தை படம்பிடிக்கும்..?? முக்கிய சாலைகளின் வேகவரம்பு பட்டியல் இதோ..!!
துபாயில் ஒரு நெடுஞ்சாலை, பிரதான சாலை அல்லது குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஒரு வழிப் பாதை என எந்தவகையான சாலையில் சென்றாலும் ஓட்டுநர்கள் வேகவரம்பைக் கடைபிடிப்பது அவசியம் மற்றும் சாலையில் வேக வரம்பைக் கடைப்பிடிப்பது என்பது ஒவ்வொரு சாலைப் பயனர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
குறிப்பாக, எமிரேட்டில் ஒவ்வொரு சாலைக்கும் குறிப்பிட்ட வேகவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேகவரம்பு அவ்வப்போது மாற்றியமைக்கப்படும். துபாயில் உள்ள சாலைகளைப் பொறுத்தவரை, துபாய் காவல்துறையின் இணையதளத்தில் எமிரேட்டில் உள்ள பிரதான சாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள வேக வரம்புகளின் திறந்த தரவுத்தளம் உள்ளது.
இந்தப் பட்டியலில் எமிரேட்டின் பிரதான சாலைகளுக்கான வேகவரம்பு மணிக்கு 60 கிமீ முதல் 120 கிமீ வரை மாறுபடும். எனவே, அதிக வேக வரம்பு உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்கள் மற்றும் பள்ளிகளைச் சுற்றியுள்ள உள் சாலைகளுக்கு, வேக வரம்பு பெரும்பாலும் மணிக்கு 40 கிமீ வேகத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சாலை வேகம்’ மற்றும் ‘ரேடார் கட்டுப்பாடு’ ஆகியவற்றுக்கு என்ன வித்தியாசம்?
ரேடார் கட்டுப்பாடு என்பது குறிப்பிட்ட வேக வரம்பிற்கு மேல் வாகனம் ஓட்டினால், ரேடாரில் ஓட்டுநர் பிடிபடும் இடத்தைக் குறிக்கிறது.
துபாயில், வாகன ஓட்டிகளுக்கு கிரேஸ் வேக வரம்பு (grace speed limit) உள்ளது, இது வழக்கமாக மணிக்கு 20 கிமீ வேகத்தில் இருக்கும், அதன் பிறகு அவர்கள் வேகமாக ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும். எடுத்துக்காட்டாக, சாலையின் வேக வரம்பு மணிக்கு 80 கிமீ எனில், உங்களுக்கு 20 கிமீ வரை கிரேஸ் வேகவரம்பு உள்ளது. எனவே, 90 கிமீ வேகத்தில் ஓட்டினால், அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்கு அபராதம் விதிக்கப்படாது. இருப்பினும், ஓட்டுநர் மணிக்கு 101 கிமீ வேகத்தில் சென்றால், அந்த வாகனம் ஒரு ரேடாரைக் கடக்கும்போது கேமராவில் பதிவாகும்.
வேக வரம்பை மீறினால் அபராதம்
எமிரேட்டில் பெரும்பாலான சாலைகள் ரேடார்களால் கண்காணிக்கப்படுவதால், வேக வரம்பை மீறி செல்லும் வாகன ஓட்டிகள், ரேடாரின் கேமராவில் சிக்கி அபராதம் செலுத்துகின்றனர். அபராதத் தொகையானது, வேக வரம்பை விட எவ்வளவு தூரம் ஓட்டிச் சென்றீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும்.
துபாய் காவல்துறை எமிரேட்டில் வேகவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள தெரு அல்லது சாலையின் பெயர், சாலையின் வேகம், ‘ரேடார் கட்டுப்பாடு’ மற்றும் பாதைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட துபாயில் உள்ள முக்கிய சாலைகளின் சில அடிப்படை விவரங்களை பட்டியலாக வெளியிட்டுள்ளது. அவற்றைப் பின்வருமாறு பார்க்கலாம்.
1. அல் நஹ்தா சாலை
வேகவரம்பு: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 4/3
2. டமாஸ்கஸ்
வேகவரம்பு: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 3
3. அல் குத்ஸ்
வேகவரம்பு: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 4
4. துனிசியா
சாலை வேகம்: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 3
5. ஷேக் கலீஃபா
வேகவரம்பு: 70
ரேடார் கட்டுப்பாடு: 91
பாதைகளின் எண்ணிக்கை: 3
6. அம்மான்
சாலை வேகம்: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 3/2
7. அல் மினா
வேகவரம்பு: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 4/3
8. பெய்ரூட்
வேகவரம்பு: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 4/3
9. ஜாபீல் செகண்ட்
சாலை வேகம்: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 2/3
10. ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான்
வேகவரம்பு: 100
ரேடார் கட்டுப்பாடு: 121
பாதைகளின் எண்ணிக்கை: 2/3
11. ஏர்போர்ட் டன்னல்-பெய்ரூட்
சாலை வேகம்: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 4
12. திரிபோலி
வேகவரம்பு: 100/90
ரேடார் கட்டுப்பாடு: 121/111
பாதைகளின் எண்ணிக்கை: 3/2
13. அல் ஜுமேரா
வேகவரம்பு: 100/90
ரேடார் கட்டுப்பாடு: 121/111
பாதைகளின் எண்ணிக்கை: 3/2
14. நாட் அல் ஷிபா
சாலை வேகம்: 70
ரேடார் கட்டுப்பாடு: 91
பாதைகளின் எண்ணிக்கை: 2
15. அல் வாஸ்ல்
சாலை வேகம்: 70
ரேடார் கட்டுப்பாடு: 91
பாதைகளின் எண்ணிக்கை: 3/2
15. பாக்தாத்
சாலை வேகம்: 70/80
ரேடார் கட்டுப்பாடு: 91/101
பாதைகளின் எண்ணிக்கை: 91/101
16. உம் அல் ஷீஃப்
வேகவரம்பு: 70
ரேடார் கட்டுப்பாடு: 91
பாதைகளின் எண்ணிக்கை: 2
17. அல் மனாரா
சாலை வேகம்: 70
ரேடார் கட்டுப்பாடு: 91
பாதைகளின் எண்ணிக்கை: 2
18. அல் அதர்
சாலை வேகம்: 70
ரேடார் கட்டுப்பாடு: 91
பாதைகளின் எண்ணிக்கை: 2
19. அல் துனாயா
சாலை வேகம்: 70
ரேடார் கட்டுப்பாடு: 91
பாதைகளின் எண்ணிக்கை: 2
20. அல் ஹதீகா
சாலை வேகம்: 70
ரேடார் கட்டுப்பாடு: 91
பாதைகளின் எண்ணிக்கை: 3/2
21. அல் சீஃப்
சாலை வேகம்: 70
ரேடார் கட்டுப்பாடு: 91
பாதைகளின் எண்ணிக்கை: 3/2
22. அல் ஒரூபா
சாலை வேகம்: 70R
ரேடார் கட்டுப்பாடு: 91
பாதைகளின் எண்ணிக்கை: 3/2
23. டவர்ஸ்
வேகவரம்பு: 70
ரேடார் கட்டுப்பாடு: 91
பாதைகளின் எண்ணிக்கை: 3/2
24. மஸ்கட்
வேகவரம்பு: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 3/2
25. அல் கைல்
சாலை வேகம்: 100
ரேடார் கட்டுப்பாடு: 121
பாதைகளின் எண்ணிக்கை: 5
26. அல் யாலேஸ்
சாலை வேகம்: 100
ரேடார் கட்டுப்பாடு: 121
பாதைகளின் எண்ணிக்கை: 2
27. அல் அவீர்
சாலை வேகம்: 100
ரேடார் கட்டுப்பாடு: 121
பாதைகளின் எண்ணிக்கை: 2
28. எமிரேட்ஸ் சாலை
சாலை வேகம்: 110
ரேடார் கட்டுப்பாடு: 131
பாதைகளின் எண்ணிக்கை: 6
29. முகமது பின் சையத்
சாலை வேகம்: 110
ரேடார் கட்டுப்பாடு: 131
பாதைகளின் எண்ணிக்கை: 2
30. எக்ஸ்போ
சாலை வேகம்: 100
ரேடார் கட்டுப்பாடு: 121
பாதைகளின் எண்ணிக்கை: 7/6
31. அல் இத்திஹாத்
சாலை வேகம்: 100
ரேடார் கட்டுப்பாடு: 121
பாதைகளின் எண்ணிக்கை: 4/3
32. ராஸ் அல் கோர்
சாலை வேகம்: 100
ரேடார் கட்டுப்பாடு: 121
பாதைகளின் எண்ணிக்கை: 5/4
33. ஷேக் சையத்
சாலை வேகம்: 100/120
ரேடார் கட்டுப்பாடு: 121/141
பாதைகளின் எண்ணிக்கை: 4/3
34. அல் ரபாத்
சாலை வேகம்: 100
ரேடார் கட்டுப்பாடு: 121
பாதைகளின் எண்ணிக்கை: 6
35. அல் கவானீஜ்
சாலை வேகம்: 100
ரேடார் கட்டுப்பாடு: 121
பாதைகளின் எண்ணிக்கை: 5/4
36. அல் அமர்டி
சாலை வேகம்: 100
ரேடார் கட்டுப்பாடு: 121
பாதைகளின் எண்ணிக்கை: 4/3
37. ஷேக் ரஷீத்
சாலை வேகம்: 100
ரேடார் கட்டுப்பாடு: 121
பாதைகளின் எண்ணிக்கை: 3/2
38. ஹத்தா மெயின் ரோடு
சாலை வேகம்: 100/120
ரேடார் கட்டுப்பாடு: 121/141
பாதைகளின் எண்ணிக்கை: 6/5
39. அல் கலீஜ்
சாலை வேகம்: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 4/3
40. விமான நிலையம்
சாலை வேகம்: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 4/3
41. நாட் அல் ஹமர்
சாலை வேகம்: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 5/3
42. கிங் சல்மான் பின் அப்துல்அஜிஸ்
சாலை வேகம்: 70
ரேடார் கட்டுப்பாடு: 91
பாதைகளின் எண்ணிக்கை: 3
43. அல் சௌஃபுஹ்
சாலை வேகம்: 70
ரேடார் கட்டுப்பாடு: 91
பாதைகளின் எண்ணிக்கை: 2
44. அவுட் மேத்தா
சாலை வேகம்: 60/80
ரேடார் கட்டுப்பாடு: 91/101
பாதைகளின் எண்ணிக்கை: 4/3
45. உம் ஹுரைர்
சாலை வேகம்: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 3
46. உம் சுகீம்
சாலை வேகம்: 90
ரேடார் கட்டுப்பாடு: 111
பாதைகளின் எண்ணிக்கை: 4/3
47. அல் மன்கோல்
சாலை வேகம்: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 2
48. அல் மனாமா
சாலை வேகம்: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 3/2
49. அல் மைதான்
சாலை வேகம்: 80/100
ரேடார் கட்டுப்பாடு: 101/121
பாதைகளின் எண்ணிக்கை: 4/3
50. காசாபிளாங்கா
சாலை வேகம்: 70
ரேடார் கட்டுப்பாடு: 91
பாதைகளின் எண்ணிக்கை: 4/3
51. ஹெஸ்ஸா
சாலை வேகம்: 80/100
ரேடார் கட்டுப்பாடு: 101/121
பாதைகளின் எண்ணிக்கை: 5/4
52. அல் மஃப்ராக்
சாலை வேகம்: 70
ரேடார் கட்டுப்பாடு: 91
பாதைகளின் எண்ணிக்கை: 3/2
53. துபாய் ஃபினான்ஸ் சாலை
சாலை வேகம்: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 5/4
54. அல் குத்ரா
சாலை வேகம்: 100
ரேடார் கட்டுப்பாடு: 121
பாதைகளின் எண்ணிக்கை: 2
55. அல்ஜீரியா
சாலை வேகம்: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 3/2
56. துனிசியா
சாலை வேகம்: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 3/2
57. துபாய்-அல் அய்ன்
சாலை வேகம்: 100/120
ரேடார் கட்டுப்பாடு: 121/141
பாதைகளின் எண்ணிக்கை: 4/3
58. அல் அசயேல்
சாலை வேகம்: 70/80
ரேடார் கட்டுப்பாடு: 91/101
பாதைகளின் எண்ணிக்கை: 3
59. கர்ன் அல் சப்கா
சாலை வேகம்: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 3
60. ஜுமேரா பாம்
சாலை வேகம்: 60
ரேடார் கட்டுப்பாடு: 91
பாதைகளின் எண்ணிக்கை: 2
61. சீஹ் ஷுஐப்
சாலை வேகம்: 80
ரேடார் கட்டுப்பாடு: 101
பாதைகளின் எண்ணிக்கை: 3
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel