துபாய்: கட்டிடத்தின் 38-வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு..!!
துபாயில் உள்ள ஷேக் சையத் சாலையின் அருகே உள்ள உயரமான கட்டிடத்தில் இருந்து இளம்பெண் ஒருவர் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் பிசினஸ் பேயில் அமைந்துள்ள எஸ்கேப் டவரில் வசித்து வந்ததாகவும், அந்த டவரின் தரை தளத்தில் அமைந்துள்ள செகண்ட் ஹோம் கஃபேக்கு அடுத்துள்ள RTA கார் பார்க்கிங் அருகே அதிகாலை 5 மணியளவில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர் 38வது மாடி கட்டிடத்தின் பால்கனியில் இருந்து விழுந்ததாக கூறப்படும் நிலையில், அதிகாரிகள் கஃபேவில் இருந்து அருகிலுள்ள சலூன் வரை சுற்றி வளைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். பின்னர், காலை 7.30 மணியளவில் துணை மருத்துவர்களால் அப்பகுதியில் இருந்து உடல் அகற்றப்பட்டதாகவும், அவரது அடையாளம் மற்றும் குடியுரிமை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிசினஸ் பேயில் அமைந்துள்ள எஸ்கேப் டவர், பிசினஸ் பே மெட்ரோ ஸ்டேஷனுக்கு அருகாமையில் இருப்பதால் இளம் தொழில் வல்லுநர்களுக்கு பிரபலமான வசிப்பிடமாக உள்ளது. அல் பாதா டவரில் உள்ளவர்கள் உட்பட பல அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் சம்பவத்தின் போது காவல்துறை சைரன்களை கேட்டதாக தெரிவித்துள்ளனர். இறந்தவரின் மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால் மேலும் விவரங்கள் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel