அமீரக செய்திகள்

அபுதாபியில் அடுத்தடுத்து மூடப்பட்டு வரும் உணவகங்கள்.. சுகாதார விதிகளை மீறிய கஃபே-வை மூட உத்தரவு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக அபுதாபி விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையத்தால் (Adafsa) அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

அவ்வாறு அதிகாரிகள் உணவகங்களில் மேற்கொள்ளும் ஆய்வில், பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய மீறல்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக உணவு நிறுவனங்களை மூடுகின்றனர். சமீபத்தில் கூட, உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக அபுதாபியில் இரண்டு உணவகங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில், அபுதாபியில் உள்ள ஒரு பர்கர் கஃபேயில் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான மீறல்கள் கண்டறியப்பட்டதால், நிர்வாக மூடல் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அல் ரீம் ஐலேண்டில் அமைந்துள்ள ஹிட் பர்கர் கஃபேக்கு உணவுப் பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக பல எச்சரிக்கைகளை வழங்கியதை அடுத்து, உணவகத்தை மூடுமாறு உத்தரவிட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

CN-2810647 என்ற வணிக உரிம எண் கொண்ட அந்த உணவகம் கடுமையான உணவுப் பாதுகாப்பு மீறல்கள் மற்றும் பயனுள்ள திருத்த நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சமீபத்திய உணவு ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADAFSA வெளியிட்ட அறிக்கையின் படி, பர்கர் கஃபே ஏற்கனவே, உணவுப் பாதுகாப்பை பாதிக்கும் அதன் நடைமுறைகள் பற்றிய எச்சரிக்கையைப் பெற்றுள்ளது. மீறல்களை திருத்திக் கொள்ளும் வரையிலும், அடையாளம் காணப்பட்ட சிக்கல்களைத் தீர்க்கும் வரையிலும் நிர்வாக மூடல் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மூடல் உணவு பாதுகாப்பு அமைப்பை பராமரிப்பதில் ADAFSA-வின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது மற்றும் அனைத்து வசதிகளிலும் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதில் அதன் பங்கை எடுத்துக்காட்டுகிறது.

இதுபோல, அமீரகத்தில் உள்ள எந்தவொரு உணவகத்திலும் ஏதேனும் மீறல்கள் காணப்பட்டாலோ அல்லது உணவின் உள்ளடக்கங்கள் சந்தேகத்திற்கிடமானாலோ, 800555 என்ற கட்டணமில்லா எண்ணுக்குத் தொடர்புகொண்டு புகாரளிக்குமாறு ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!