அதிகரிக்கும் வெளிநாட்டினர் வருகை.. தொடர்ந்து உயரும் துபாயின் மக்கள்தொகை.. விரைவில் 4 மில்லியனை எட்டும் என கணிப்பு..!!
துபாயின் மக்கள்தொகையானது சிறந்த வேலை வாய்ப்பு தேடுபவர்கள், வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இருந்து அதிக வருமானத்தைப் பெற விரும்பும் முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டில் தொழில் செய்பவர்கள் ஆகியோர்களின் வருகையால் 2026 ஆம் ஆண்டளவில் 4 மில்லியனை எட்டும் என்று உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான S&P கணித்துள்ளது.
மேலும் அமீரகத்தின் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வேலைக்காக துபாய்க்குச் செல்பவர்களைத் தவிர்த்து, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் துபாயின் மக்கள்தொகை 3.7 மில்லியனை எட்டியது என்றும் கூறப்பட்டுள்ளது. இது 2026 ஆம் ஆண்டிற்குள் 4 மில்லியனைத் தொடும் என்று கணித்துள்ளதாகவும் S&P ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
துபாய் பிராந்திய அளவில் நிதி, சுற்றுலா மற்றும் வர்த்தக மையமாக, கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பாரிய முதலீட்டு வரவுகளைக் காணும் நிலையில், இதன் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைவதுடன் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இது உலகெங்கிலும் உள்ள கோடீஸ்வரர்களை துபாய்க்கு ஆர்வமுடன் வரவழைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் துபாய் எமிரேட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) சுமார் 38,000 டாலர் (139,460 திர்ஹம்ஸ்) என மதிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நடப்பு ஆண்டின் துவக்கத்தில் இருந்து துபாயின் மக்கள்தொகை 134,000க்கும் மேலாக அதிகரித்து, அக்டோபர் 16 இல் 3.789 மில்லியனை எட்டியது. முக்கியமாக வெளிநாட்டு தொழில் வல்லுநர்கள், தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் வருகை காரணமாக, ஜனவரி 2021 முதல், நகரத்தின் மக்கள் தொகை 378,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeமேலும், துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவுடன் இணைந்து 2024 மற்றும் 2040 க்கு இடையில் சென்டி மில்லியனர்களின் இடம்பெயர்வு 150 சதவீதத்திற்கும் மேலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் முதலீட்டு இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் கூற்றுப்படி, உலகளவில் முதல் 50 நகரங்களில் 15வது இடத்தில் உள்ள துபாயில் தற்பொழுது 212 சென்டி மில்லியனர்கள் மற்றும் 72,500 மில்லியனர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட துபாய் பொருளாதார நிகழ்ச்சி நிரல் D33 இன் ஒரு பகுதியாக, அடுத்த தசாப்தத்தில் எமிரேட் தனது பொருளாதாரத்தின் அளவை இரட்டிப்பாக்குவதையும், வெளிநாட்டு வர்த்தகத்தை 25.6 டிரில்லியனாக உயர்த்துவதையும், ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2023 இல் 3.3 சதவிகித GDP வளர்ச்சியைத் தொடர்ந்து 2024-2027 இல் உண்மையான GDP வளர்ச்சி சராசரியாக 3 சதவிகிதத்திற்கு அருகில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் மற்றும் நிதிச் சேவைகள் உள்ளிட்ட சேவைத் துறை, அமீரகம் முழுவதிலும் உள்ள சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களால் ஆதரிக்கப்படும் துபாயின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும், வணிக-நட்பு விதிமுறைகள், எளிமைப்படுத்தப்பட்ட விசா கட்டுப்பாடு மற்றும் நீண்ட கால ரெசிடென்ஸி விசாக்களின் வெற்றி ஆகியவை துபாயில் புதிய வணிகங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும் S&P ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தொடர்ந்து துபாயில் மக்கள்தொகையானது அபரிமிதமான அளவில் வளர்ச்சியடையும் என கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel