2025ல் துபாயில் வீட்டு வாடகை குறையுமா?? ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கூறுவது என்ன?

துபாயில் அடுத்த 15 மாதங்களில் 100,000 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வில்லாக்கள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், எமிரேட்டில் குடியிருப்பு பகுதிகளில் தங்குவதற்கான விலைகள் அற்றும் வீட்டு வாடகைகள் குறையும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக எமிரேட்ஸ் NBD ரிசர்ச் ரெய்டின் வெளியிட்ட தரவுகளின் படி, செப்டம்பர் வரை 21,300க்கும் மேற்பட்ட யூனிட்கள் நகரம் முழுவதும் ஒப்படைக்கப்பட்டுள்ளன மற்றும் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் 110,000 யூனிட்கள் முடிக்கப்பட உள்ளன.
நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 21,300 யூனிட்கள் ஒப்படைக்கப்பட்டதாகவும் மேலும் 25,000 யூனிட்கள் கட்டுமானத்தில் இருப்பதாகவும் துபாய் சொத்து சந்தை பற்றி எமிரேட்ஸ் NBD ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2025 ஆம் ஆண்டில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் 75,940 யூனிட்கள் விநியோகிக்கப்படும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
துபாயில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சொத்து வாங்குவோர் மற்றும் வாடகைக்கு இருப்பவர்களின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய எமிரேட்டுக்கு வலுவான புதிய விநியோகம் தேவைப்படுகிறது. தொழில் வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆர்வமாக துபாய்க்கு குடிபெயர்வதால் புதிய யூனிட்களுக்கான தேவை அதிகரித்து, குடியிருப்புகளுக்கான வாடகைகள் மற்றும் விலைகள் எமிரேட்டில் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. எனவே, இந்த புதிய வலுவான சப்ளையானது வீடுகளின் விலையில் நிலைத்தன்மையைக் கொண்டுவரும் மற்றும் எமிரேட்டில் வாடகை விகிதத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
செப்டம்பர் மாதத்தில் நகரம் முழுவதும் சுமார் 16,800 க்கும் மேற்பட்ட குடியிருப்பு யூனிட்கள் சப்ளை செய்யப்பட்டு ஒரு புதிய மாதாந்திர சாதனையை பதிவு செய்ததால் மந்தநிலைக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று எமிரேட்ஸ் NBD ரிசர்ச்சின் ரியல் எஸ்டேட் ஆராய்ச்சிக்கான இயக்குனர் ஸ்வப்னில் பிள்ளை தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனவரி-செப்டம்பர் மாதங்களில் நகரம் முழுவதும் விற்பனை செய்யப்பட்ட சொத்துக்களின் எண்ணிக்கை 121,100 யூனிட்களைத் தாண்டியுள்ளது, இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 31 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியிருப்பு சந்தையில் நீடித்த மற்றும் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் பரிவர்த்தனை எண்களில் தெளிவாகத் தெரிகிறது என்று கூறிய அவர், 2019 ஆம் ஆண்டில், நகரம் மொத்தம் 23,661 பரிவர்த்தனைகளைக் கண்டதாகவும், அதே நேரத்தில் நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும், 32,700 க்கும் அதிகமான யூனிட்டுகள் விற்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், 2024 இல், காலாண்டுக்கு சராசரியாக 27,000 யூனிட்கள் விற்கப்பட்டது என்பதையும் இது 2023 இல் 16,200 காலாண்டு பரிவர்த்தனைகளை விட அதிகம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துபாயில் உள்ள ஆடம்பர சொத்துக்கள் அதிக நிகர மதிப்புள்ள நபர்களுக்கு ஒரு காந்தமாக இருப்பதாகவும், பாம் ஜுமேரா மற்றும் துபாய் ஹில்ஸ் எஸ்டேட் போன்ற சமூகங்கள் உலக கவனத்தை ஈர்ப்பதாகவும் ரியல் எஸ்டேட் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி, சொத்து வாங்குபவர்கள் சொத்தில் முதலீடு செய்வது மட்டுமல்லாமல், வாழ்க்கை முறையிலும் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, துபாயை அதன் உலகத் தரம் வாய்ந்த வசதிகள், பாதுகாப்பு மற்றும் மூலோபாய இருப்பிடத்திற்காக தேர்வு செய்கிறார்கள் என்று கூறப்படுகின்றது.
துபாயின் ரியல் எஸ்டேட் சந்தை நிலையான வளர்ச்சிக்கான பாதையில் இருப்பதாகவும், 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டை நெருங்கும் போது கண்ணோட்டம் நேர்மறையானதாகவே இருக்கிறது என்றும் ரியல் எஸ்டேட் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel