துபாய் ஏர்போர்ட்ஸ்: இனி இமிகிரேஷன் கவுண்டர்களில் வரிசையில் நிற்க தேவையில்லை.. வெகுவிரைவில் அறிமுகமாகும் புதிய அமைப்பு..!!

விரைவில் துபாய் ஏர்போர்ட்ஸ் வழியாக பயணம் செய்பவர்கள் இமிக்ரேஷன் கவுண்டர்களை கடந்து செல்ல ஒரு சில வினாடிகள் மட்டுமே ஆகும் என்று துபாய் பொது இயக்குநரகம் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்கள் (GDRFA) தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய GDRFA இன் லெப்டினன்ட் ஹமத் அல்மண்டூஸ் அவர்கள், விமான நிலையம் முழுவதும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும், அது பயணிகள் நடந்து செல்லும் போது புகைப்படம் எடுக்கும் மற்றும் அதை அவர்களின் ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் என்று தெரிவித்துள்ளார்.
“future of immigration” என அழைக்கப்படும் இந்த அமைப்பு பயணிகள் எந்த இமிகிரேஷன் கவுண்டர்களிலும் வரிசையில் நிற்காமல் நொடிகளில் விமான நிலையத்தை கடந்து செல்ல அனுமதிக்கும் என்றும், நாங்கள் ஏற்கனவே இந்த அமைப்பை சோதனை செய்து வருகிறோம், விரைவில் இது அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற Gitex Global தொழில்நுட்ப மாநாட்டின் போது, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிகழ்வுகளில் ஒன்றான ஜிடெக்ஸ் குளோபல் மாநாடு, துபாய் வேர்ல்டு டிரேட் சென்டரில் (DWTC) 5 நாட்களுக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கூறியுள்ளதன்படி, வெகு விரைவில் துபாய் ஏர்போர்ட்ஸ் வழியாக செல்லும் பயணிகள் பாஸ்போர்ட்டை எடுப்பது மற்றும் உரிய பயண ஆவணங்களைக் காண்பிப்பது போன்ற சிரமமின்றி எளிதாக பயணிக்கலாம் என கூறப்படுகின்றது.
துபாய் விமான நிலையங்களில் தடையற்ற பயணம் பல ஆண்டுகளாக முன்னுரிமையாக உள்ள நிலையில், 2021 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஃபாஸ்ட்-டிராக் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு சேவையானது, ஒன்பது வினாடிகளுக்குள் இமிகிரேஷன் நடைமுறைகளை முடிக்க பயணிகளுக்கு உதவியாக இருக்கின்றது.
துபாயைப் போலவே, வசதியான விமான பயணத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அபுதாபி ஏர்போர்ட்ஸ் ஜூலை 21 அன்று, பயோமெட்ரிக் ஸ்மார்ட் டிராவல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது தானியங்கி பயணி பதிவு சேவை, சுய-சேவை பேக்கேஜ் டெலிவரி மற்றும் இ-கேட் மற்றும் போர்டிங் கேட்களில் முக அங்கீகார சரிபார்ப்பு ஆகியவற்றை வழங்கும், மேலும் இது பயணிகளுக்கான பயண ஆவணங்கள் அல்லது விமான நிலைய ஊழியர்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கான தேவையை நீக்குகிறது.
இந்த திட்டம், அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டியின் தரவுத்தளங்களைப் பயன்படுத்தி, பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயணிகளை தானாக அங்கீகரிக்கும் மற்றும் புறப்படும் பயணிகளுக்கு முன் பதிவு செய்வதற்கான தேவையை நீக்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel