துபாயில் நீண்ட நாட்களுக்குப் பிறகு குறைந்த தங்கத்தின் விலை.. தற்போதைய நிலவரம் என்ன..??
தங்கத்திற்கு பெயர் போன துபாயில் செவ்வாய்கிழமை மாலை தங்கத்தின் விலை மளமளவென சரிந்து ஒரு கிராம் தங்கம் 316 திர்ஹம்ஸ்க்கு விற்பனை செய்யப்பட்டது. துபாய் ஜூவல்லரி குழுமம் வெளியிட்டுள்ள தங்க விலை நிலவரங்களின் படி, ஒரு கிராம் 320 திர்ஹம்ஸ் ஆக இருந்த 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 4 திர்ஹம்ஸ் சரிந்து 316 திர்ஹம்ஸ்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) ஒரு கிராம் தங்கம் 317 திர்ஹம்ஸிற்கு விற்கப்பட்டு வருகின்றது.
இதேபோல், 22 காரட் தங்கம் 293.5 திர்ஹம்ஸ்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது, மேலும், 21 காரட் 284 திர்ஹம்ஸ் மற்றும் 18 காரட் 243.50 திர்ஹம்ஸ் என தங்கம் விலை பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இது சமீப காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய விலைச் சரிவுகளில் ஒன்றாகும்.
செவ்வாய்க்கிழமையன்று ஸ்பாட் தங்கம் 1 சதவீதத்திற்கும் அதிகமாக விலை சரிந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 2,614.16 டாலர் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது, பின்னர் ஃபெடரல் ரிசர்வ் ஒரு பெரிய வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்புகளை சமீபத்திய அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் விலை நிர்ணயித்ததால் இரவு 8 மணிக்கு 1.1 சதவீதம் குறைந்ததாகக் கூறப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக குறைந்திருப்பது வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்குவதற்கு ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel