அமீரக செய்திகள்

துபாயில் அதிக கட்டணம் செலுத்தாமல் போக்குவரத்து முறைகளிடையே மாற முடியும் தெரியுமா..?? எப்படி..??

துபாயில் பொதுப்போக்குவரத்தை அடிக்கடி பயன்படுத்துபவரா நீங்கள்..?? மலிவான கட்டணத்தில் வெவ்வேறு பொதுப் போக்குவரத்து முறைகளை பயன்படுத்தி உங்கள் இலக்கை அடைவது எப்படி என்பது உங்களுக்குத் தெரியுமா..??

துபாயின் பொதுப் போக்குவரத்து அமைப்பானது நீங்கள் பயணிக்கும் மண்டலங்களின் (zones) எண்ணிக்கையின் அடிப்படையில் கட்டணங்களை வசூலிக்கிறது. மேலும், நீங்கள் வெறும் 7.50 திர்ஹம்களுக்கு அல் ரஷிதியாவிலிருந்து ஜெபல் அலிக்கு எளிதாகப் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் கட்டணம் செலுத்தாமல் துபாய் மெட்ரோ, டிராம் மற்றும் பஸ் இடையே மாறுவது எப்படி என்பது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

  • மண்டலங்கள் (zones) – துபாய் ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பயணிக்கும் மண்டலங்களின் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும், போக்குவரத்து முறைகளில் அல்ல.
  • 30 நிமிட பரிமாற்றம் – நீங்கள் 30 நிமிடங்களுக்குள் போக்குவரத்து முறைகளுக்கு இடையில் மாறினால், உங்கள் பயணம் ஒரு பயணமாகக் கருதப்படுகிறது.
  • உங்கள் இடமாற்றங்கள் மற்றும் பயண நேரத்தை அதிகப்படுத்துதல் – உங்கள் பயணத்தில் மூன்று மணிநேரத்தில் மூன்று இடமாற்றங்கள் வரை செய்யலாம்.

நோல் கார்டு வகை

உங்கள் பயணத்திற்கான கட்டணங்கள் உங்கள் நோல் கார்டு வகை மற்றும் நீங்கள் பயணிக்கும் மண்டலங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. ஒரு மண்டலத்திற்குள் பயணம் செய்ய கட்டணம் 3 திர்ஹம்சில் தொடங்குகிறது, அதே நேரத்தில் பல மண்டலங்களைக் கடக்க நிலையான கட்டணம் 7.50 திர்ஹம்ஸ் ஆகும். உங்கள் நோல் கார்டு வகையைப் பொறுத்து கட்டணம் மாறுபடலாம்.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

உதவிக்குறிப்பு

எமிரேட்டின் விரிவான மண்டல வரைபடங்கள் மற்றும் குறிப்பிட்ட நோல் கார்டு கட்டண அமைப்புகளுக்கு துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) உருவாக்கப்பட்ட பயண திட்டமிடல் செயலியான S’hail செயலியைப் பார்க்கவும்.

முதலில் அப்ளிகேஷனை திறந்து, உங்கள் மொபைல் திரையின் கீழே உள்ள ‘Menu’ என்பதைத் தட்டவும். அடுத்து, ஸ்க்ரோல் செய்து, ‘Maps and Guides’ என்பதை கிளிக் செய்யவும். இப்போது, துபாய் மெட்ரோ, பேருந்து, டிராம் மற்றும் கடல் போக்குவரத்து சேவைகளுக்கான விரிவான பாதை வரைபடங்களை நீங்கள் காணலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!