துபாய்: தடையை நீக்கிய RTA.. இனி மெட்ரோ மற்றும் டிராமில் பயணிப்பவர்கள் இ-ஸ்கூட்டர்களை எடுத்துச் செல்லலாம்..!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மெட்ரோ மற்றும் டிராமில் பயணிப்பவர்கள் இ-ஸ்கூட்டர்களை இனி எடுத்துச் செல்லலாம் என்று இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.
இருக்கை இல்லாத மடிக்கக்கூடிய இ-ஸ்கூட்டர்களை எடுத்துச் செல்வதற்கான தடை அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அந்த தடையானது நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் இ-ஸ்கூட்டர்களை மெட்ரோ மற்றும் டிராமில் அனைத்து செயல்பாட்டு நேரங்களிலும் எடுத்துச் செல்ல முடியும்.
RTA வெளியிட்ட அறிவிப்பின்படி, இ-ஸ்கூட்டர்கள் 120cm x 70cm x 40cm அளவு விவரக்குறிப்பிற்கு பொருந்த வேண்டும் மற்றும் 20 கிலோவிற்கு மேல் எடை இருக்கக்கூடாது.
அதேசமயம், இ-ஸ்கூட்டரை எடுத்துச் செல்வதற்கான விதிகள் இப்போது சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கீழே பட்டியலிடப்பட்டுள்ள புதிய விதிகளுக்கு இணங்க வேண்டும்:
- துபாய் மெட்ரோ அல்லது டிராம் வளாகத்தில் இ-ஸ்கூட்டருக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை
- கதவுகள், இருக்கைகள், பாதைகள் அல்லது அவசர உபகரணங்களைத் தடுக்காதீர்கள்
- துபாய் மெட்ரோ அல்லது டிராம் வளாகத்திற்குள் ஈரமான அல்லது அழுக்கு இ- ஸ்கூட்டர்கள் அனுமதிக்கப்படவில்லை
- நிலையங்கள் அல்லது நடைபாதைகளில் இ-ஸ்கூட்டர் ஓட்டக்கூடாது
- ஸ்டேஷன்கள், பிளாட்பார்ம்கள் அல்லது ரயில்கள்/டிராம்களில் நுழையும் போது இ-ஸ்கூட்டர்கள் மடிக்கப்பட வேண்டும்.
- மெட்ரோ அல்லது டிராம் வளாகத்திற்குள் எப்பொழுதும் இ-ஸ்கூட்டர் மின்சாரத்தை அணைக்க வேண்டும்
- காயம் அல்லது சேதத்தை ஏற்படுத்தக்கூடிய துருத்திக்கொண்டிருக்கும் பாகங்கள் மறைக்கப்பட வேண்டும் அல்லது பின்வாங்கப்பட வேண்டும் (கைப்பிடிகள் மற்றும் சைக்கிள் பெடல்கள் போன்றவை)
- தங்கள் இ-ஸ்கூட்டர்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்குப் பயணிகள் பொறுப்பு
- மெட்ரோ ரயில் நிலையங்களில் செக்-இன்/அவுட் செய்யும் போது இ-ஸ்கூட்டர்கள் மடிக்கப்பட்டு அகலமான வாயில்களைப் பயன்படுத்த வேண்டும்.
- எப்பொழுதும் கவனம் செலுத்துங்கள் மற்றும் விதிகளின்படி உங்கள் இ-ஸ்கூட்டரைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்
- சேதமடைந்த பேட்டரிகள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- இரட்டை பேட்டரிகள் இருக்கக் கூடாது.
- சுற்றுச்சூழல் மாசுபாடுகளை வெளியேற்றுவது இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- பயன்படுத்தப்படும் பேட்டரிகள் சர்வதேச தரங்களுக்கு இணங்க வேண்டும் (அதாவது UL, IEC போன்றவை)
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மார்ச் 1 முதல் மெட்ரோ மற்றும் டிராமுக்குள் இ-ஸ்கூட்டர்களுக்கு தடை விதிப்பதாக துபாய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel