துபாய் மெட்ரோவில் பயணிக்க இனி nol கார்டும் தேவையில்லை.. விரைவில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்..!!
துபாயில் பயணிகள் நோல் கார்டு தேவையின்றி மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதிக்கும் புதிய தொழில்நுட்பம் 2026 ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “RTA வில் உள்ள எங்களின் சிறப்பான மையத்தில் நாங்கள் இதை இன்னும் சோதித்து வருகிறோம், அதற்கு குறைந்தது ஒன்றரை வருடங்களாவது முழு உத்தரவாதம் மற்றும் முழு தரச் சோதனை தேவைப்படுகிறது” என்று ஆணையத்தின் ஆட்டோமேட்டட் கலெக்சன் சிஸ்டத்தின் இயக்குனர் சலா அல்மர்சூகி கூறியுள்ளார். இந்த தொழில்நுட்பம் 2026 அல்லது அதற்குப் பிறகு வெளிவரத் தயாராக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துபாய் வேர்ல்டு டிரேட் சென்டரில் நடைபெறும் ஜிடெக்ஸ் குளோபல் தொழில்நுட்ப கண்காட்சியில் RTA ஸ்டாண்டில் காண்பிக்கப்பட்ட அமைப்பின் பிரசென்டேஷன் போது, பயணிகள் தங்கள் உள்ளங்கையை நோல் கார்டுடன் எவ்வாறு எளிதாக இணைக்க முடியும் என்பதை அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஅதாவது, பயணிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள ஸ்மார்ட் கேட்களில் தங்கள் உள்ளங்கையை ஸ்கேன் செய்து எளிதாக கடந்து செல்ல முடியும். மேலும், இந்த அமைப்பில் இணைக்கப்பட்ட நோல் கார்டில் இருந்து பயணக் கட்டணம் தானாகவே கழிக்கப்படும்.
தொடர்ந்து பேசிய அல் மர்சூகி, கணக்கு அடிப்படையிலான டிக்கெட் முறைக்கு (account-based ticketing system) மாற்றுவதன் ஒரு பகுதியாக RTA இந்த திட்டத்தில் செயல்படுவதாகக் குறிப்பிட்டார். ஒரு பயணி இதைப் பயன்படுத்தி மெட்ரோ மட்டுமில்லாமல், பேருந்து மற்றும் எந்தவொரு பொதுப் போக்குவரத்திலும் தங்கள் உள்ளங்கையை ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் செலுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி, பல கடைகளில் இப்போது நோல் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதால், இந்த கான்செப்ட் இறுதி செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பிறகு, நாங்கள் கணினியில் மேலும் பணியாற்றப் போகிறோம், இதன் மூலம் நீங்கள் உங்கள் உள்ளங்கையைப் பயன்படுத்தி கடைகளிலும் பணம் செலுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் (ICP) அதிகாரி ஒருவர், உள்ளங்கையைப் பயன்படுத்தி விரைவான, தடையற்ற சேவைகளை வழங்குவதற்கான தீர்வு, இது பொது மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்று கூறியிருந்தார். இது UAE இன் மத்திய வங்கியின் ஒத்துழைப்புடன் ICP ஆல் உருவாக்கப்படுகிறது
நோல் கார்டு
சமீபத்திய தரவுகளின் படி, சுற்றுலாப் பயணிகளுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நோல் கார்டுகள் அதிக ஆர்வத்தைக் கண்டுள்ளதாகவும் அல்மர்சூகி தெரிவித்துள்ளார். சுற்றுலா நோல் கார்டு இந்தாண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் துபாய்க்கு வரும்போது, விமான நிலையத்தில் உள்ள விற்பனைக் கவுண்டருக்குச் சென்று, மெட்ரோ, டிராம், பேருந்துகளுக்கு பயன்படுத்தக்கூடிய இந்த கார்டை 150 திர்ஹம் கொடுத்து வாங்கலாம்.
அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை சுற்றியுள்ள 800 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களிடம் தள்ளுபடியைப் பெறலாம், அவை முக்கியமாக பாலைவன சஃபாரிகள், ஹோட்டல்கள் மற்றும் பிற சுற்றுலா தலங்கள் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்துகின்றன என்று அல்மர்சூகி தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம், RTA புதிய நோல் கார்டை அறிமுகப்படுத்தியது, இது பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்கியது, இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாணவர் அடையாள அட்டையாகவும் செயல்பட்டது, இது உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சேவைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கும். மாணவர் நோல் கார்டானது, எமிரேட்ஸ், புக்கிங்.காம், கத்தார் ஏர்வேஸ், யூடியூப், ஸ்பாட்டிஃபை மற்றும் நூன் உள்ளிட்ட பல விற்பனையாளர்களிடம் தள்ளுபடிகளை வழங்குகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel