UAE: இனி ஓட்டுநர், வாகன உரிம சேவைகளை ITC மூலமாக பெறலாம்.. அபுதாபி அறிவிப்பு..!!
அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) ஓட்டுநர் மற்றும் வாகன உரிம சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் இப்போது ITC மூலம், ஓட்டுநர் மற்றும் வாகன உரிம சேவைகளைப் பெறலாம். இதன்மூலம் அமீரகத்தின் தலைநகரில் அனைத்து ஓட்டுநர் மற்றும் வாகன உரிம நடவடிக்கைகளுக்காக ஒரு புத்திசாலித்தனமான மற்றும் ஒருங்கிணைந்த சேவை அமைப்பை நிறுவுவதே இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை அபுதாபியின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்துவதற்கும், பல்வேறு துறைகள் மற்றும் சேவைகளில் உள்ளுர் பொருளாதாரத்தின் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்குமான தலைமைத்துவத்தின் அபிலாஷைகளுடன் ஒத்துப்போகிறது.
போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியான இந்த முன்முயற்சி, சிறந்த உலகளாவிய தரநிலைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப அபுதாபியின் மூலோபாய பார்வையுடன் அதை இணைக்கும் என்று கூறப்படுகிறது.
ஓட்டுநர் மற்றும் வாகன உரிம சேவைகள் எனும்போது, ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுகளை வழங்குதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றை நிர்வகிக்கும் செயல்முறைகள் மற்றும் செயல்பாடுகளைக் குறிக்கின்றன. இவற்றில் பின்வரும் சேவைகளும் இதில் அடங்கும்:
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஓட்டுநர் உரிமம்: எழுத்து மற்றும் நடைமுறை ஓட்டுநர் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது உட்பட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் குடியிருப்பாளர்களுக்கு மதிப்பீடு செய்தல் மற்றும் உரிமங்களை வழங்குதல்.
வாகனப் பதிவு: வாகன உரிமையைப் பதிவு செய்தல் மற்றும் பதிவு ஆவணங்கள் மற்றும் லைசென்ஸ் ப்ளேட்களை வழங்குதல்.
புதுப்பித்தல்கள்: வாகன உரிமங்கள் மற்றும் பதிவுகளை ரினியூவல் செய்தல், அத்துடன் உரிமை அல்லது தனிப்பட்ட தகவல்களில் மாற்றங்களைச் செயல்படுத்துதல்.
அபராதம் மற்றும் மீறல்கள்: போக்குவரத்து மீறல்கள் மற்றும் பிற ஒழுங்குமுறை மீறல்களுக்கான தண்டனைகள் மற்றும் அபராதங்களை நிர்வகித்தல்.
இது குறித்து ITCயின் இயக்குநர் ஜெனரல் அப்துல்லா அல் மர்சூகி பேசுகையில், உயர்தர ஓட்டுநர் மற்றும் வாகன உரிம சேவைகளை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்வதோடு, மூலோபாய பங்காளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும், வரவிருக்கும் கட்டத்தில் முதன்மையானதாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தச் சேவைகளை வழங்குவது வாடிக்கையாளர் அனுபவத்தையோ அல்லது கூட்டாளர்களுடனான கடமைகளையோ பாதிக்காது என்பதையும் அவர் உறுதியளித்தார்.
அதேசமயம், அபுதாபி சிட்டி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா பிராந்தியத்தில் உள்ள அனைத்து தற்போதைய சேவை மையங்களிலும் ஓட்டுநர் மற்றும் வாகன உரிம சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். கூடுதலாக டிஜிட்டல் தளங்கள், ஸ்மார்ட்போன் ஆப்கள், Tamm டிஜிட்டல் அரசாங்க சேவைகள் தளம் மற்றும் தொடர்பு மையங்கள் மூலமாகவும் இந்த சேவைகளை அணுக முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel