அமீரக செய்திகள்

துபாய்: குளோபல் வில்லேஜிற்கு பஸ் மற்றும் அப்ரா சேவைகளை மீண்டும் தொடங்கிய RTA…

துபாயின் பிரபலமான பன்முகக் கலாச்சார இலக்குகளில் ஒன்றான குளோபல் வில்லேஜின் 29வது சீசன் கடந்த அக்டோபர் 16 அன்று தொடங்கியுள்ள நிலையில், குளோபல் வில்லேஜிற்கு செல்லும் நான்கு பேருந்து வழித்தடங்கள் மீண்டும் இயக்கப்படுவதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

குளோபல் வில்லேஜுக்கு செல்லும் பேருந்து வழித்தடங்கள்

  1. ரஷிதியா பேருந்து நிலையத்திலிருந்து ரூட் 102: ஒவ்வொரு 60 நிமிடங்களுக்கும் இயக்கப்படுகிறது
  2. யூனியன் பஸ் ஸ்டேஷனிலிருந்து ரூட் 103: ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் இயக்கப்படுகிறது
  3. அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து ரூட் 104: ஒவ்வொரு 60 நிமிடங்களுக்கும் இயக்கப்படுகிறது;
  4. மால் ஆஃப் எமிரேட்ஸ் பஸ் நிலையத்திலிருந்து ரூட் 106: ஒவ்வொரு 60 நிமிடங்களுக்கும் இயக்கப்படுகிறது.

மேற்கூறிய வழித்தடங்களில் கூடுதலாக கோச் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன, இது பார்வையாளர்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து அனுபவத்தை உறுதி செய்கிறது.

இதற்கு முந்தைய சீசனில், RTA வின் குளோபல் வில்லேஜ் பேருந்து சேவை சுமார் 5,73759 பயணிகளுக்கு சேவை செய்தது, 2022 – 2023 சீசனில் 448716 பயணிகளுக்கு சேவை செய்தது. இது பயணிகளின் எண்ணிக்கையில் 22% அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

சுற்றுலா அப்ரா சேவைகள்

RTA இந்த சீசனுக்காக குளோபல் வில்லேஜிற்குள் அதன் பிரபலமான சுற்றுலா அப்ரா சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. சீசன் முழுவதும் பார்வையாளர்களுக்கு சேவை செய்ய மின்சாரத்தில் இயங்கும் இரண்டு அப்ராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!