ஷார்ஜா: 7 நாள் மண்டலங்களுக்கான புதிய கட்டண பார்க்கிங் நேரம் வெளியீடு…
ஷார்ஜா நகர முனிசிபாலிட்டியானது, 7 நாள் மண்டலங்களுக்கு புதிய திருத்தப்பட்ட கட்டண பார்க்கிங் நேரத்தை அறிவித்துள்ளது. இந்த மண்டலங்கள் நீல நிற குறியீடுகளால் அடையாளம் காணப்படுகின்றன.
தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஷார்ஜாவில் உள்ள ஓட்டுநர்கள் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை பார்க்கிங் இடங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த 16 மணி நேர கட்டண பார்க்கிங் இடங்கள் வாரம் முழுவதும் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, கட்டண பார்க்கிங் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஷார்ஜாவில், பார்க்கிங் இடங்கள் பொதுவாக நீலம் மற்றும் வெள்ளை நிற கர்ப் அடையாளங்களுடன் குறிக்கப்படுகின்றன, அதனுடன் பயன்பாடு மற்றும் கட்டணங்கள் பற்றிய தெளிவான வழிமுறைகளை வழங்கப்பட்டிருக்கும்.
இது தொடர்பாக ஷார்ஜா சிட்டி முனிசிபாலிட்டி அக்டோபர் 27, வெளியிட்ட ஒரு அறிக்கையில், “நீல மண்டலங்களில் நீட்டிக்கப்பட்ட கட்டண பார்க்கிங் நேரம் அதிகாரப்பூர்வ விடுமுறைகள் உட்பட வாரத்தின் அனைத்து நாளும் அமலுக்கு வரும். இந்த நடவடிக்கை பார்க்கிங் செயல்திறனை மேம்படுத்துவதையும், இடம் கிடைப்பதை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஷார்ஜாவில் உள்ள அனைத்து கட்டண பார்க்கிங் மண்டலங்களுக்கும் பொருந்தகூடிய பார்க்கிங் கட்டண விபரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பார்க்கிங் டிக்கெட்டுகளுக்கு நீங்கள் எமிரேட்டில் SMS பார்க்கிங் சேவை மூலமாகவும் கட்டணம் செலுத்தலாம்.
- 1 மணி நேரம் – 2 திர்ஹம்ஸ்
- 2 மணி நேரம் – 5 திர்ஹம்ஸ்
- 3 மணி நேரம் – 8 திர்ஹம்ஸ்
- 5 மணி நேரம் – 12 திர்ஹம்ஸ்
தினசரி பார்க்கிங் இடங்களைப் பயன்படுத்துபவர்கள், தினசரி கட்டணத்திற்குப் பதிலாக, ப்ரீபெய்ட் பார்க்கிங் சந்தாக்களைத் தேர்வு செய்யலாம், இது தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் அவர்கள் தேர்ந்தெடுத்த திட்டங்களுக்கு ஏற்ப கட்டண பார்க்கிங் பகுதிகளைப் பயன்படுத்துவதற்கான வசதியை வழங்குகிறது.
அதுமட்டுமில்லாமல், சந்தாதாரர்கள் ஷார்ஜாவின் அனைத்து பகுதிகளுக்கும் அல்லது இரண்டு குறிப்பிட்ட பகுதிகளுக்கும் தனிப்பட்ட சந்தாவை தேர்வு செய்யலாம், அதே நேரத்தில் வணிகங்கள் நகரம் முழுவதும் பார்க்கிங் திட்டத்தை தேர்வு செய்யலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தா வகையின் அடிப்படையில் கட்டணங்கள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷார்ஜா நகரின் அனைத்து பகுதிகளுக்குமான வணிக பார்க்கிங்:
ஷார்ஜா நகரின் அனைத்து பகுதிகளுக்கும் வணிக சந்தா, சந்தாதாரருக்கு ஷார்ஜா நகரத்தில் உள்ள அனைத்து பொது வாகன நிறுத்துமிடங்களிலும் வாகனங்களை நிறுத்துவதற்கான உரிமையை வழங்குகிறது.
கால அளவு | கட்டணம் |
10 நாட்கள் | 170 திர்ஹம்ஸ் |
20 நாட்கள் | 290 திர்ஹம்ஸ் |
30 நாட்கள் | 390 திர்ஹம்ஸ் |
3 மாதம் | 1,050 திர்ஹம்ஸ் |
6 மாதம் | 1,750 திர்ஹம்ஸ் |
12 மாதம் | 2,850 திர்ஹம்ஸ் |
இரண்டு பகுதிகளுக்கான கமெர்ஷியல் பார்க்கிங்
கால அளவு | கட்டணம் |
3 மாதம் | 600 திர்ஹம்ஸ் |
6 மாதம் | 1,100 திர்ஹம்ஸ் |
12 மாதம் | 2,100 திர்ஹம்ஸ் |
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel