அமீரக செய்திகள்

UAE: பிக் டிக்கெட் டிராவில் இந்த மாதம் முழுவதும் தங்கக் கட்டியை வெல்லும் வாய்ப்பு..!!

அபுதாபியின் பிக் டிக்கெட் டிரா, இந்த மாதம் நம்பமுடியாத பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்புகளை வழங்க உள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, டிராவில் பங்கேற்பவர்கள் அக்டோபர் முழுவதும் ஒவ்வொரு நாளும் 24-காரட் தங்கக் கட்டியை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று பிக் டிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதாவது, அக்டோபர் 2 முதல், வாங்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டும் தானாகவே பங்கேற்பாளர்களை இ-டிராவில் சேர்க்கும் என்றும், இது தினமும் ஒரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளருக்கு ஒரு மதிப்புமிக்க தங்கக் கட்டியை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர் மாதம் வாங்கப்பட்ட ஒவ்வொரு டிக்கெட்டும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் கிராண்ட் டிராவில் ஒரு இடத்தைப் பெறுகிறது, இதில் ஒரு அதிர்ஷ்டசாலி பங்கேற்பாளர் 20 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை வெல்வார் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இதற்கு முன்பு நடந்து முடிந்த ‘September’s lucky Tuesday’ இ-டிராவுக்கான கடைசி வாராந்திர டிராவில் மூன்று அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு தலா 100,000 திர்ஹம்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வார வெற்றியாளர்களில் விஜேஷ் விஜயனும் ஒருவர். கேரளாவைச் சேர்ந்த இவர், செப்டம்பர் 26 ஆம் தேதி தனது வெற்றிக்கான டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். அந்த டிக்கெட் அவருக்கு நம்பமுடியாத ரொக்கப் பரிசை மட்டுமல்லாமல், மகிழ்ச்சி மற்றும் ஆச்சரியத்தின் மறக்கமுடியாத தருணத்தையும் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவதாக அனூப் என்ற 32 வயதான எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது அதிர்ஷ்டத்தை சோதித்து வந்த நிலையில், இந்த முறை வாராந்திர டிராவில் ரொக்கத் தொகையை வென்றிருக்கிறார். 8 ஆண்டுகளாக துபாயில் வசிக்கும் அனூப், தான் தன்னுடைய 10-15 நண்பர்கள் கொண்ட குழுவுடன் பிக் டிக்கெட் வாங்கியதாகவும், பரிசுத் தொகையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது வெற்றியாளர் 28 வயதான கடை உதவியாளரான துஷாரா தெக்கேகனியில். கேரளாவைச் சேர்ந்த துஷாரா சுமார் இரண்டு ஆண்டுகளாக ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார். துஷாரா தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுடன் குழு சேர்ந்து பிக் டிக்கெட்டை வாங்கியதாகவும், வென்றுள்ள ரொக்கப் பரிசை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மீதமுள்ள தொகையை கடன்களை அடைக்க வீட்டிற்கு அனுப்ப உள்ளதாகவும், இனி தொடர்ந்து பிக் டிக்கெட்டுகளை வாங்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அபுதாபி பிக் டிக்கெட் வருகின்ற நவம்பர் 3 அன்று நடைபெறும் டிராவின் போது, 355,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள ஒரு ரேஞ்ச் ரோவர் வேலார் போன்ற சொகுசு கார்களை கிராண்ட் ரொக்கப் பரிசுடன் வழங்க உள்ளது. மேலும், 470,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள BMW 840i, அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிடப்படும், இந்த சொகுசு காருக்கான டிரா டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!