அமீரக செய்திகள்

துபாய், அபுதாபியில் தேசிய தினத்தை முன்னிட்டு சிறப்பு வானவேடிக்கை..!! இலவசமாக எங்கெல்லாம் பார்க்கலாம்…??

ஐக்கிய அரபு அமீரகம் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதியன்று அதன் 53வது தேசிய தினத்தைக் கொண்டாடும் வேளையில், குடியிருப்பாளர்கள் இந்தாண்டின் கடைசி நீண்ட வார விடுமுறை நாட்களையும் அனுபவிக்க உள்ளனர். அமீரகம் முழுவதும் தேசிய தினம் ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக நடந்தேறும். ஐக்கிய அரபு அமீரகம் டிசம்பர் 2, 1971 அன்று ஏழு எமிரேட்ஸ் ஒன்றிணைந்ததை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் தேசிய தினத்தைக் கொண்டாடி வருகிறது.

இந்த வருடம், நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணையும் ஈத் அல் எதிஹாத் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தாண்டு கொண்டாட்டம் அல் அய்ன் நகரில் நடைபெற உள்ளது. இதனை நேரலையில் பார்க்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விடுமுறைக்கு நாட்டிலுள்ள சில பிரபலமான குடும்ப பொழுதுபோக்கு இடங்களில் வானவேடிக்கைகள் இரவு வானை அலங்கரிக்க உள்ளது. ஆகவே, நீண்ட விடுமுறை நாட்களை எப்படி செலவிடுவது என்று திட்டமிடுபவர்கள் வாண வேடிக்கைகளை நிகழ்ச்சிகளை இலவசமாக அனுபவிக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆகவே, அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் துபாய் மற்றும் அபுதாபியில் எந்தெந்த இடங்களில் தேசிய தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் சிறப்பு வானவேடிக்கை நிகழ்ச்சிகளை கண்டு மகிழலாம் என்பது பற்றிய விபரங்களை பின்வருமாறு பார்க்கலாம்.

துபாய்

துபாயில் தேசிய தினத்தை கொண்டாட விரும்பும் குடியிருப்பாளர்கள் பின்வரும் இடங்களில் டிசம்பர் 1 முதல் 3 வரையிலான தேதிகளில் வானவேடிக்கை நிகழ்ச்சிகளை இலவசமாக அனுபவிக்கலாம்.

  • புளூவாட்டர்ஸ் மற்றும் தி பீச், JBR: டிசம்பர் 1, இரவு 8 மணி
  • ஹத்தா சைன்: டிசம்பர் 2, இரவு 8 மணி
  • துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால்: டிசம்பர் 2, இரவு 9.10 மணி
  • அல் சீஃப்: டிசம்பர் 3, இரவு 9 மணி

துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ்க்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு மாலையில் ரிவர்லேண்டில் ஒரு வானவேடிக்கை காட்சி அளிக்கப்படும். வழக்கமான நுழைவுக் கட்டணம் 15 திர்ஹம்ஸ் பொருந்தும், ஆனால் நீங்கள் வளாகத்தில் உள்ள ஹோட்டலுக்கு விருந்தினராக சென்றால்  அல்லது ஏதேனும் தீம் பார்க்ஸுக்கு நீங்கள் டிக்கெட் வைத்திருந்தால், நீங்கள் ரிவர்லேண்டை இலவசமாக அணுகலாம். இங்கு டிசம்பர் 1 மற்றும் 2 ம் தேதி இரவு 7 மற்றும் இரவு 9.30 மணிக்கு வானவேடிக்கை நடைபெறும்.

அபுதாபி

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரில் ஈத் அல் எதிஹாத் கொண்டாட்டம் பிரம்மாண்டமாக இருக்கும். அங்கு இரவு வானை வண்ணங்களால் ஒளிரச் செய்யும் பட்டாசுகள், குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பரப்பும். பின்வரும் இடங்களில் நீங்கள் வான வேடிக்கைகளை காணலாம்.

  • யாஸ் பே வாட்டர்ஃபிரண்ட்: டிசம்பர் 2, இரவு 9 மணி
  • யாஸ் மெரினா சர்க்யூட்: டிசம்பர் 2, இரவு 9 மணி (யாஸ் மெரினா சர்க்யூட்டில் நிகழ்ச்சியைப் பார்க்க நுழைவு இலவசம் என்றாலும், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிகழ்விற்கு பதிவு செய்ய வேண்டும்.)
  • அல் மரியா ஐலேண்ட் (வாட்டர்ஃபிரண்ட் ப்ரோமினேட்): டிசம்பர் 2 மற்றும் 3, இரவு 9 மணி

இவை தவிர, நீங்கள் அல் வத்பாவில் உள்ள பிரபலமான ஷேக் சையத் ஃபெஸ்டிவலுக்குச் சென்றால், நீங்கள் வான வேடிக்கைகள் மட்டுமின்றி, எமிராட்டி நாட்டுப்புற கலைகள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் நடனங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பெரிய கலாச்சார கொண்டாட்டத்தை அனுபவிக்க முடியும்.

நுழைவு கட்டணம் ஒரு நபருக்கு வெறும் 10 திர்ஹம் ஆகும். இது 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம். அதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் அபுதாபி கார்னிச்சில் தேசிய தினத்தை முன்னிட்டு சிறப்பு வானவேடிக்கையும் நடைபெறும்.

  • ஷேக் சையத் ஃபெஸ்டிவல், அல் வத்பா: டிசம்பர் 1-3
  • அபுதாபி கார்னிச்: டிசம்பர் 1-2

இவற்றை தவிர்த்து அல் அய்னில் நடைபெறும் மற்றொரு திருவிழா, மதர் ஆ ஃப் தி நேஷன் (MOTN) ஆகும். இது கச்சேரிகள் மற்றும் பல செயல்பாடுகளுடன் வானவேடிக்கை காட்சிகளுடன் விருந்தினர்களை உபசரிக்கும். MOTN டிக்கெட்டுகள் 25 திர்ஹம்ஸில் தொடங்குகின்றன. இங்கு டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதி வானவேடிக்கை நடைபெறும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!