அமீரக செய்திகள்

UAE: விமானப் பயணத்தின் போது லக்கேஜ் சேதம் அல்லது தொலைந்து விட்டதா?? விமான நிறுவனத்திடம் இழப்பீடு கோர முடியுமா??

ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணிக்கும் நபர்கள் விமான பயணத்தின் போது லக்கேஜ்களை தொலைத்து விட்டால் பயணிகளுக்கான உரிமை என்ன..?? விமான நிறுவனத்திடம் இழப்பீடு கோர முடியுமா..?? போன்ற சந்தேகங்கள் பயணிக்கும் நபர்களுக்கு இருக்கலாம். அது குறித்த விரிவான விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

உதாரணமாக, பயணி ஒருவர் விமான நிறுவனத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். வணிகப் பரிவர்த்தனைகள் சட்டத்தை வழங்கும் 2022 ஆம் ஆண்டின் 50 ஆம் எண் ஃபெடரல் ஆணைச் சட்டத்தின் பிரிவு 353(2) இன் படி பயணிகளின் சரிபார்க்கப்பட்ட பைகளுக்கு (checked-in luggage) விமான நிறுவனம் பொறுப்பாகும்.

இந்த சட்டத்தில் “இதன் உட்பிரிவு (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள லக்கேஜ்கள் என்பது, பயணத்தின் போது, ​​விமானத்தில் உள்ள பயணிகளால் எடுத்துச் செல்லப்படும் அல்லது பயணத்தின் போது விமான நிறுவனத்திற்கு வழங்கக்கூடிய லக்கேஜ்களை குறிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிக பரிவர்த்தனை சட்டத்தின் 356 (1) இன் படி, விமானப் பயணத்தின் போது விபத்து ஏற்பட்டு சேதம் ஏற்பட்டால் செக் இன் லக்கேஜ்கள் மற்றும் சரக்குகளின் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் இழப்புக்கு விமான நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல், பயணத்தின் போது மற்றும் அதன்பிறகு பயணிகளின் லக்கேஜ்களில் சேதம் அல்லது இழப்பு ஏற்பட்டால், அவர்களின் லக்கேஜ்களை வழங்குவதற்கு முன்னர், ஒரு விமான நிறுவனம் ஒரு கிலோகிராம் சாமான்களுக்கு 500 திர்ஹம்ஸ் வரை ஈடுசெய்ய வேண்டியிருக்கும். இது ஐக்கிய அரபு அமீரக வணிக பரிவர்த்தனைச் சட்டத்தின் பிரிவு 359 (2) க்கு இணங்க உள்ளது.

எவ்வாறாயினும், லக்கேஜ் அல்லது சரக்குகளை டெலிவரி செய்யும் போது, லக்கேஜ்களை ​​அனுப்பியவர் ஒரு சிறப்பு அறிக்கையை அனுப்பி, லக்கேஜ் மதிப்பின் காரணமாக, செல்ல வேண்டிய இடத்தில் நல்ல நிலையில் டெலிவரி செய்யப்படுவதற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, விமான நிறுவனம் கோரும் கூடுதல் கட்டணத்தையும் அவர் செலுத்தியிருந்தால், லக்கேஜ்கள் மற்றும் சரக்குகளின் உண்மையான மதிப்பை விட இழப்பீடு அதிகமாக இருப்பதாக விமான நிறுவனம் நிரூபிக்கும் வரை, அனுப்புநரால் குறிப்பிட்ட தொகையை விமான நிறுவனம் இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

கூடுதலாக, லக்கேஜ்களின் இழப்பு அல்லது சேதம் குறித்து, ஒரு பயணி விமான நிறுவனங்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் புகாரளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் மேற்கூறிய விதிகளின் அடிப்படையில் லக்கேஜை தொலைத்த நபர், முதலில் விமான டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பயணிகள் சரிபார்க்கலாம். ஏனெனில் இது பொதுவாக செக்-இன் லக்கேஜ் இழப்பை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய விவரங்களை உள்ளடக்கியிருக்கும். பின்னர், தொலைந்த லக்கேஜ்கள் குறித்து விமான நிறுவனத்திடம் முறையான புகாரை பதிவு செய்யலாம். விமான நிறுவனத்தின் பதிலில் திருப்தி அடையவில்லை என்றால், துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் புகாரைச் சமர்ப்பிக்கலாம். அதன்பிறகும், இந்த விவகாரம் தீர்க்கப்படாமல் இருந்தால், துபாய் நீதிமன்றத்தில் விமான நிறுவனத்திற்கு எதிராக சிவில் உரிமைகோரலை தாக்கல் செய்து இழப்பீடு கோரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!