துபாயில் ஈத் அல் ஃபித்ர்: சிறப்பு வானவேடிக்கை காட்சிகளை இலவசமாக எங்கே காணலாம்..??

துபாய் முழுவதும் ஈத் அல் ஃபித்ர் கொண்டாட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பண்டிகைத் திருநாளை முன்னிட்டு துபாயின் வானம் வானவேடிக்கைகளால் ஜொலிக்க உள்ளது. இந்த நிகழ்வுகள் மார்ச் 30 முதல் 31 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பிறை பார்ப்பதன் அடிப்படையில் இந்த தேதிகள் உறுதி செய்யப்படும். அதுமட்டுமில்லாமல், பார்வையாளர்கள் அனைவரும் இந்த வான வேடிக்கை காட்சிகளை இலவசமாகக் கண்டுகளிக்க முடியும்.
எனவே, ஈத் அல் ஃபித்ர் கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் குடியிருப்பாளர்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்றுகூடுவதற்கு இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும். இந்த வாணவேடிக்கைக் காட்சிகள் நடைபெறக் கூடிய இடங்கள், தேதிகள் மற்றும் நேரம் உள்ளிட்ட முழுவிபரங்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
இடங்கள் மற்றும் நேரம்:
1. நெஸ்னாஸ் பீச் (Nessnass beach) (ஜுமேரா 3, சன்செட் மாலுக்குப் பின்னால்)
- தேதி: ஈத் முதல் நாள்
- நேரம்: இரவு 8:00 மணி
2. ஹத்தா (ஹத்தா சைனுக்கு அருகில்)
- தேதி: ஈத் முதல் நாள்
- நேரம்: இரவு 8:00 மணி
3. தி பீச் (JBR எதிரே) & ப்ளூவாட்டர்ஸ்
- தேதி: ஈத் 2வது நாள்
- நேரம்: இரவு 9:00 மணி.
பீச் கேண்டீன் (ஜுமேரா 3, நெஸ்னாஸ் பீச்): இந்த இடத்தில் மாலை நேர வானவேடிக்கைகளை தவிர்த்து, பார்வையாளர்கள் உணவுகள், நேரடி பொழுதுபோக்கு மற்றும் குடும்ப செயல்பாடுகளை வழங்கும் சிறந்த உணவு அனுபவத்தைப் பெறலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel