நான்காவதாக பெண் குழந்தையை வரவேற்கும் துபாய் பட்டத்து இளவரசர்.. பெயரை சமூக ஊடகத்தில் பகிர்ந்து அறிவிப்பு..!!

துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் குடும்பம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு குழந்தையுடன் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. தனது குடும்பத்திற்கு புதிதாகப் பிறந்த பெண் குழந்தையை வரவேற்ற மகிழ்ச்சியான செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட ஷேக் ஹம்தான், குழந்தைக்கு சூட்டப்பட்ட பெயரையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “அல்லாஹ், அவளுக்கு உமது அன்பால் நிறைந்த இதயத்தை வழங்கு, அவளை ஒளி மற்றும் வழிகாட்டுதலின் ஆதாரமாக ஆக்கு, அவளுக்கு ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் ஆடைகளை அணிவிப்பாயாக” என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெண் குழந்தைக்கு “ஹிந்த் பின்த் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி 2023 இல், ஷேக் ஹம்தான் தனது மூன்றாவது குழந்தையான “முகமது பின் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம்” என்ற மகனை வரவேற்றார். இந்த அறிவிப்பு இதேபோல் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டது. அதே ஆண்டின் பிற்பகுதியில், அவர் தனது தந்தையான துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது தனது பேரக்குழந்தையுடன் இருக்கும் ஒரு நெகிழ்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான், இன்ஸ்டாகிராமில் குடும்பத்தின் மகிழ்ச்சியான தருணங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். அவருக்கு கிட்டத்தட்ட 17 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel