அமீரக செய்திகள்

ஈத் விடுமுறையில் மட்டும் 3.6 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள்.. மிகவும் பிஸியாகும் துபாய் ஏர்போர்ட்..!!

உலகின் பிஸியான விமான நிலையங்களில் முதன்மையான இடத்தில் இருக்கும் துபாய் இன்டர்நேஷனல் (DXB) தற்பொழுது அமீரகத்தில் வரவிருக்கும் விடுமுறை காலத்தை முன்னிட்டு அதிகளவு பயணிகள் பயணிக்கவுள்ளதையொட்டி அதற்கேற்ப தயாராகி வருகிறது. அதாவது மார்ச் 26 முதல் ஏப்ரல் 7 வரையிலான உச்ச பயண காலத்தில் 3.6 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் அதன் டெர்மினல்களைக் கடந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஏப்ரல் 5 சனிக்கிழமை, 309,000 பயணிகளுடன் துபாய் சர்வதேச நிலையம் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த காலகட்டத்தில் தினசரி மொத்த போக்குவரத்து சராசரியாக, 276,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏப்ரல் முதல் வாரத்தில் மிகவும் பரபரப்பான நாட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. கடந்த மாதத்தில் சராசரி வாராந்திர பயணிகளை ஒப்பிடுகையில் ஈத் வாரத்தில் 19 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறிப்பிடத்தக்க  முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.

ஈத் விடுமுறையுடன் பள்ளி விடுமுறைகளும் ஒத்துப்போவதால், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் UK போன்ற நாடுகளில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பார்வையிடும் பயணிகளிடமிருந்து அதிக தேவை இருக்கும் என்றும், கூடுதலாக, இலங்கை, துருக்கி, இத்தாலி போன்ற இடங்களுக்கான ஓய்வு பயணம் அதிகரிப்பதைக் காணலாம் என்றும் DXB தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கான ஆலோசனை

இத்தகைய உச்ச காலங்களில் பயணிகள் விமான நிலையத்திற்கு செல்ல உதவுவதற்காக, புதிய DXB எக்ஸ்பிரஸ் வரைபடங்களைப் (DXB Express Map) பயன்படுத்த துபாய் ஏர்போர்ட்ஸ் பரிந்துரைத்துள்ளது. விமான தகவல் திரைகளில் (flight information screen) காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பயணிகள் தங்களின் விமான வாயில்கள் (gate), உணவு, ஷாப்பிங் உள்ளிட்டவற்றிற்கான நிகழ்நேர திசைகளை வழங்குகிறது.

மேலும் விமான நிறுவனங்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் சேர்ந்து, துபாய் ஏர்போர்ட்ஸ் இந்த பிஸியான விடுமுறை காலத்தில் அனைத்து பயணிகளுக்கும் மென்மையான பயணத்தை உறுதி செய்வதற்காக செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!