அமீரக வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி.. குறைந்த பெட்ரோல், டீசல் விலை.. ஏப்ரல் மாத விலைப்பட்டியல் வெளியீடு..

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது நாளை தொடங்கவிருக்கும் ஏப்ரல் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. மார்ச் மாதம் எரிபொருள் விலையில் பெரிதளவு மாற்றமில்லாத நிலையில் ஏப்ரல் மாதத்தில் தற்போதுள்ள எரிபொருள் விலையில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் குழுவின் ஏப்ரல் மாத விலைப்பட்டியலின் படி, Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 2.57 திர்ஹம்ஸாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலையானது மார்ச் மாதத்தில் 2.73 திர்ஹம்சாக இருந்தது.
அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது தற்போதைய அறிவிப்பின்படி, ஒரு லிட்டருக்கு 2.46 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை மார்ச் மாதத்தில் 2.61 திர்ஹம்ஸாக இருந்தது
மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 2.38 திர்ஹம்ஸாக உள்ளது. இது மார்ச் மாதத்தில் 2.54 திர்ஹம்ஸாக இருந்தது. அதே போல் டீசல் விலை தற்பொழுது லிட்டருக்கு 2.77 திர்ஹம்சாக இருக்கும் நிலையில் வரக்கூடிய ஏப்ரல் மாதத்தில் 2.63 திர்ஹம்ஸாக குறைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய சந்தையில் நிலவிய விலையேற்றம் காரணமாக கடந்த சில மாதங்களாக அமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, நவம்பர் மாதத்தில் அனைத்து வகையான பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பைக் கண்டது. அதே நேரம் டிசம்பர் மாதத்தில் சற்று குறைக்கப்பட்டிருத்த நிலையில் ஜனவரி மாதத்தில் விலை மாறாமல் இருந்ததுடன் பிப்ரவரி மாதத்தில் உயர்த்தப்பட்டது. பின் மார்ச் மாதத்தில் விலை பெரிதளவு மாற்றமில்லாமல் இருந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel