அமீரகத்தில் ஊதியத்துடன் கூடிய ‘Sick leave’ பெறுவது எப்படி? உரிமைகள், விதிகள் மற்றும் முக்கிய தேவைகள் என்ன…??

நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்தால், உங்களுக்கு உரிமையுள்ள சலுகைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கும், எந்தவொரு வேலைவாய்ப்புப் பிரச்சினைகளையும் தவிர்ப்பதற்கும் நாட்டின் சட்ட விதிகளை அறிந்துகொள்வது அவசியம். நாட்டின் தொழிலாளர் சட்டங்கள் ஊதியம் மற்றும் ஊதியம் இல்லாத நோய்விடுப்பு, முதலாளி அறிவிப்புகள் மற்றும் பணிநீக்கக் கொள்கைகள் குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன.
அவற்றில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் நோய்விடுப்பை நிர்வகிப்பது மற்றும் விதிகளுக்கு இணங்குவது பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நோய்விடுப்பு உரிமைகள் (sickleave eligibilities)
வேலை செய்யும் நிறுவனத்தில் தங்கள் தகுதிகாண் காலத்தை (probation period) முடித்த ஊழியர்கள் வருடத்திற்கு 90 நாட்கள் நோய்விடுப்பு பெற உரிமையுடையவர்கள். இந்தக் காலகட்டம் தொடர்ச்சியாகவோ அல்லது இடைவிடாமலோ எடுக்கப்படலாம். இந்த விடுப்பு சமயங்களில் சம்பளம் பின்வருமாறு கட்டமைக்கப்படும்:
- முதல் 15 நாட்கள் – முழு ஊதியம்
- அடுத்த 30 நாட்கள் – அரை ஊதியம்
- மீதமுள்ள 45 நாட்கள் – ஊதியம் இல்லாத விடுப்பு
தகுதிகாண் காலத்தில் (probation period) இருக்கும் ஊழியர்களுக்கு, முதலாளியின் ஒப்புதலுடன் மட்டுமே நோய்விடுப்பு வழங்கப்படுகிறது மற்றும் மருத்துவ அறிக்கை தேவைப்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், விடுப்புக்கு ஊதியம் கிடைக்காது.
பின்வரும் சூழ்நிலைகளில் ஊதியத்துடன் கூடிய நோய்விடுப்பு வழங்கப்படாது.
- ஊழியர்கள் இன்னும் ப்ரொபேஷன் பீரியடில் இருந்தால்.
- மது அல்லது போதைப்பொருள் பயன்பாடு போன்ற தவறான நடத்தையின் விளைவாக நோய் ஏற்பட்டால்.
- ஊழியர்கள் அமீரக சட்டங்கள் மற்றும் நிறுவனக் கொள்கைகளின்படி பணியிடப் பாதுகாப்பு விதிகளை மீறியதனால் நோய்வாய்ப்பட்டால் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படாது.
நோய்விடுப்பு பற்றி முதலாளிக்குத் தெரிவித்தல்
அமீரக தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 31 இன் படி, ஊழியர்கள் நோய்வாய்ப்பட்ட மூன்று நாட்களுக்குள் தங்கள் முதலாளிக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும், உடல்நிலையை சரிபார்க்க அங்கீகரிக்கப்பட்ட சுகாதார அதிகாரியிடமிருந்து மருத்துவ அறிக்கை தேவை.
முதலாளிகள் நோய்விடுப்பின் போது ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்ய முடியாது. இருப்பினும், ஒரு ஊழியர் தனது 90 நாள் நோய்விடுப்பை முடிந்த பின்னரும் வேலைக்குத் திரும்பவில்லை என்றால், முதலாளி அவர்களின் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளலாம். அமீரக தொழிலாளர் விதிமுறைகளின்படி, இதுபோன்ற சந்தர்ப்பங்களிலும், பணியாளருக்கு கிராஜுட்டி (gratuity) போன்ற சேவையின் இறுதிப் பலன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நோய்விடுப்புக்கு விண்ணப்பிக்கத் தேவையானவை:
ஊழியர்கள் நோய் விடுப்புக்கு விண்ணப்பிக்கும் போது, மருத்துவ விடுப்பு கொள்கை மற்றும் மருத்துவரின் குறிப்பு கட்டாயமா என்பது குறித்து தங்கள் மனிதவளத் துறையுடன் (HR) சரிபார்க்க வேண்டும். இருப்பினும், பிரிவு 31 இன் படி, உள்ளூர் சுகாதார அதிகாரியிடமிருந்து பொதுவாக மருத்துவச் சான்றிதழ் தேவைப்படுகிறது. மருத்துவர்கள் ஒரு நோய்விடுப்புச் சான்றிதழை வழங்குகிறார்கள், அதை முதலாளிக்கு வழங்க வேண்டும். இந்த சான்றிதழ் பொதுவாக இலவசமாக வழங்கப்படுகிறது.
நீட்டிக்கப்பட்ட நோய்விடுப்புக்கான சான்றளிப்பு
ஊழியர் 5 நாட்கள் வரை நோய்விடுப்பு எடுக்க சான்றளிப்பு (attestation) தேவையில்லை. 5 நாட்களுக்கு மேல், 1 மாதம் வரை நோய்விடுப்பு எடுக்க வேண்டுமானால், அந்தந்த எமிரேட்டில் உள்ள மருத்துவ துணைக் குழுவின் சான்றளிப்பு மற்றும் ஒப்புதல் தேவை.
அவ்வாறு சான்றளிப்பு தேவைப்பட்டால், ஷார்ஜா மற்றும் வடக்கு எமிரேட்ஸுக்கு, தனியார் மற்றும் அரசு சுகாதார மையங்கள் இரண்டும் MOHAP மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். துபாய் அல்லது அபுதாபியில் உள்ள ஊழியர்கள் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் (MOHAP) வலைத்தளம் வழியாக டிஜிட்டல் முறையில் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் முன், அவர்களின் நகர சுகாதார அதிகாரியின் ஒப்புதல் தேவை.
மேற்கூறிய விதிமுறைகளைப் புரிந்துகொள்வது, ஊழியர்கள் தங்கள் நோய் விடுப்பை திறம்பட நிர்வகிக்கவும், அமீரக தொழிலாளர் சட்டங்களுடன் இணங்குவதை உறுதிப்படுத்தவும் உதவும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel