அமீரக செய்திகள்

அபுதாபி: வேலைக்குச் சேராத ஊழியருக்கு 110,400 திர்ஹம்ஸ் ஊதியம் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!! என்ன நடந்தது??

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி தொழிலாளர் நீதிமன்றம், வேலையைத் தொடங்க வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு ஊழியருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த ஒரு வழக்கானது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த ஊழியருக்கு, நான்கு மாதங்கள் மற்றும் 18 நாட்களுக்கு 110,400 திர்ஹம்ஸ் ஊதியம் வழங்க வேண்டும் என்று வேலையைத் தொடங்க அனுமதிக்காத நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 11, 2024 முதல் ஏப்ரல் 7, 2025 வரை தாமதமான சம்பளத்தை வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அந்த நபர், 7,200 திர்ஹம்ஸ் அடிப்படை சம்பளம் மற்றும் மொத்தம்  24,000 திர்ஹம்ஸ் மாதாந்திர தொகுப்புடன் ஒரு நிலையான கால ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்பட்டதாகவும், வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், நிறுவனம் தனது சேரும் தேதியைத் தொடர்ந்து தாமதப்படுத்தியதாகவும், இதனால் அவருக்கு எந்த வருமானமும் இல்லாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகிய நிறுவனத்தின் பிரதிநிதி, தொழிலாளி பணிக்கு வரவில்லை என்றும் விடுப்பில் சென்றதாகவும் வாதிட்டிருக்கிறார். ஆனால் இந்தக் கூற்றை ஆதரிக்கவோ அல்லது அவர் இல்லாததாகக் கூறப்படுவது குறித்த முறையான ஆதாரத்தையோ நீதிமன்றத்திடம் காட்டவில்லை. எனவே தாமதம் முற்றிலும் நிறுவனத்தின் தவறு என்று நீதிபதி முடிவு செய்தார்.

நீதிமன்றத்தின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டின் கூட்டாட்சி ஆணை-சட்ட எண். 33 இன் கீழ், நிறுவனங்கள் மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்தின் விதிமுறைகளின்படி, தாமதங்களைப் பொருட்படுத்தாமல், சரியான நேரத்தில் ஊதியத்தை வழங்க வேண்டும். சிவில் பரிவர்த்தனை சட்டத்தின் பிரிவு 912 ஐயும் தீர்ப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, இது ஊதியம் ஒரு தொழிலாளியின் உரிமை என்றும் சட்டப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் அதை நிறுத்தி வைக்க முடியாது என்றும் கூறுகிறது.

ஊழியர் எடுத்த உறுதிப்படுத்தப்பட்ட விடுப்பு காரணமாக மொத்த சம்பளத்திலிருந்து எட்டு நாட்களை நீதிமன்றம் கழித்து, இறுதியில் நான்கு மாதங்கள் மற்றும் 18 நாட்களுக்கு ஊதியம் வழங்க நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு, ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதில் தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் சட்ட விளைவுகள் குறித்து முதலாளிகளுக்கு நினைவூட்டுவதாகவும், நியாயமான இழப்பீடு பெறுவதற்கான தொழிலாளர்களின் உரிமைகளை எடுத்துக்காட்டுவதாகவும் உள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!