ஈத் விடுமுறையில் மட்டும் 620,000க்கும் மேற்பட்ட பயணிகள் துபாயில் பயணம்..!!

கடந்த ஜூன் 5 முதல் 8 வரையிலான நான்கு நாட்களில் விடப்பட்டிருந்த ஈத் அல் அதா விடுமுறையின் போது சுமார் 620,000 க்கும் மேற்பட்ட பயணிகள் துபாய் வழியாகப் பயணம் செய்ததாக துபாய் பொது அடையாள மற்றும் வெளிநாட்டினர் விவகார இயக்குநரகம் (GDRFA) புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, துபாய் சர்வதேச விமான நிலையத்தின் (DXB) டெர்மினல்கள் வழியாக 581,527 பயணிகள் சென்றதால், இந்த பயணத்தில் DXB மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது என்றும் GDRFA தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சுமார் 46,863 பயணிகள் ஹத்தா எல்லைச் சாவடி வழியாகவும், மேலும் 1,169 பேர் எமிரேட்டின் கடல்சார் துறைமுகங்கள் வழியாகவும் சென்றதாகத் தரவுகள் கூறுகின்றன, இதனால் மொத்த பயணிகளின் எண்ணிக்கை 629,559 ஆக உயர்ந்துள்ளது. “இந்த எண்ணிக்கை போக்குவரத்து மற்றும் குடியிருப்புக்கான உலகளாவிய மையமாக துபாய் அனுபவிக்கும் துடிப்பை பிரதிபலிக்கிறது” என்று GDRFA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து GDRFA விமான நிலையத் துறையின் உதவி இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் தலால் அல்-ஷாங்கீதி பேசுகையில், நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதிலும் பயணிகள் ஓட்டத்தை மேம்படுத்துவதிலும் ஸ்மார்ட் வாயில்கள் மற்றும் AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி எடுத்துரைத்துள்ளார். மேலும் “எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் மற்றும் நிறுவன தயார்நிலையை வலுப்படுத்தும் நெகிழ்வான சேவைகளை வழங்குவதற்கான துபாய் அரசாங்கத்தின் அணுகுமுறைக்கு ஏற்ப, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக பயண அனுபவம் மாறியுள்ளது” என்றும் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel