ADVERTISEMENT

துபாயில் நாளை நீட்டிக்கப்பட்ட மெட்ரோ இயக்க நேரங்களை வெளியிட்ட RTA!!

Published: 22 Nov 2025, 6:12 PM |
Updated: 22 Nov 2025, 6:13 PM |
Posted By: Menaka

துபாயில் குடியிருப்பாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துபாய் ரன் நாளை நடைபெறவுள்ள நிலையில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாய் ரன் 2025 இல் பங்கேற்கும் மக்களுக்கு உதவுவதற்காக வருகின்ற நவம்பர் 23 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கூடுதல் நேரம் மெட்ரோ இயங்கும் என்று அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

மேலும், மாபெரும் ஓட்டப் பந்தய நிகழ்வுக்காக துபாயில் உள்ள சில சாலைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் காலை 10 மணி வரை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு RTA அறிவுறுத்தியுள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்கும் நபர்கள் தொடக்கப் புள்ளியை அடைய, பங்கேற்பாளர்கள் வேர்ல்டு டிரேட் சென்டர் மெட்ரோ நிலையத்திற்கு செல்லலாம். ஒரு சுற்றுப் பயணத்திற்கு தங்கள் நோல் அட்டைகளில் குறைந்தபட்சம் 15 திர்ஹம்ஸ் (சில்வர்) அல்லது 30 திர்ஹம்ஸ் (கோல்ட்) கிரெடிட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் RTA அனைவருக்கும் நினைவூட்டியுள்ளது.

ADVERTISEMENT

துபாய் ரன் என்பது எமிரேட்டின் மிகப்பெரிய வருடாந்திர உடற்பயிற்சி நிகழ்வாகும், அங்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் ஷேக் சையத் சாலையில் ஒரு சிறப்புப் பாதையில் ஓடக்கூடிய ஒரு நிகழ்வாகும். ஒவ்வொரு வருடமும் துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் அவர்கள் இந்த துபாய் ரன் நிகழ்வில் பங்கேற்பாளர்களுடன் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT