ADVERTISEMENT

துபாய்: சாலையில் திடீரென சுவாசிக்க முடியாமல் தவித்த குழந்தை..!! முதலுதவி செய்து காப்பாற்றிய நபருக்கு குவியும் பாராட்டு!!

Published: 30 Nov 2025, 7:45 PM |
Updated: 30 Nov 2025, 7:45 PM |
Posted By: Menaka

துபாய் குடியிருப்பாளர் ஒருவர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பரபரப்பான தெருவில் திடீரென மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட குழந்தைக்கு விரைந்து முதலுதவி செய்து ஆபத்திலிருந்து காப்பாற்றிய செயலுக்காக ‘Dubai Civility Committee’ ஆல் கௌரவிக்கப்பட்டுள்ளார். ஓவைஸ் பஹ்ராம் முஃபாரிட் (Owais Bahram Mufarrid) என்ற அந்த நபர் பனியாஸ் பகுதியில் அமர்ந்திருந்தபோது, ​​ஒரு தாய் பதற்றத்துடன் தனது மகளை சுமந்துகொண்டு சென்றதாகவும், அப்போது குழந்தை மூச்சு விட சிரமப்பட்டு சுயநினைவை இழக்கும் தருவாயில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

நேரில் கண்ட சாட்சிகளின்படி, ஓவைஸ் உடனடியாக குழந்தையைத் தனது கைகளில் எடுத்துக்கொண்டு விரைவான முதலுதவி அளித்தார், சில நொடிகளில் குழந்தை சுவாசிக்க உதவினார். ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள், குழந்தை நிலைபெற்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த நபர்கள் அவரது அமைதியையும் விரைவான எதிர்வினையையும் பாராட்டியுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, துபாய் சிவிலிட்டி கமிட்டியின் பொது ஒருங்கிணைப்பாளர் சயீத் அல் நசாரி, ஓவைஸை வரவேற்று பாராட்டியதுடன், சரியான நேரத்தில் அவரது தலையீடு துபாயின் ஆழமான வேரூன்றிய சமூக உணர்வை பிரதிபலிக்கும் “முன்மாதிரியான மனிதாபிமான செயல்” என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், இந்த சம்பவம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் முன்வைத்த கொள்கைகளை உள்ளடக்கியது என்று அவர் கூறியுள்ளார். துபாயின் வலிமை அதன் மக்களின் ஒற்றுமையிலும் ஒருவருக்கொருவர் துணைநிற்பதற்கான அவர்களின் அர்ப்பணிப்பிலும் உள்ளது என்றும் அல் நசாரி வலியுறுத்தியுள்ளார்.

துபாயின் நகர்ப்புற கட்டமைப்பை ஆதரிக்கும் சகவாழ்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தின் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாக, இதுபோன்ற செயல்களை அங்கீகரிப்பதில் குழு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

துபாய் சிவிலிட்டி கமிட்டி என்பது ஷேக் முகமது பின் ரஷீத்தின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமதுவால் செப்டம்பர் 26, 2025 அன்று வெளியிடப்பட்ட ஒரு முடிவின் மூலம் நிறுவப்பட்டது. உலகின் மிகவும் ஒழுங்கான மற்றும் சமூக ரீதியாக ஒருங்கிணைந்த நகரங்களில் ஒன்றாக துபாயின் அந்தஸ்தைப் பராமரிக்கவும், அதன் சமூக மற்றும் மனிதாபிமான மதிப்புகளை வலுப்படுத்தும் செயல்களை அங்கீகரிக்கவும் இந்தக் குழு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel