துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான துபாய் ரைட் நிகழ்வு நாளை (நவம்பர் 2 ஆம்) நடைபெறவுள்ளது. இந்நிலையில் துபாய் நகரில் நடைபெறும் துபாய் ரைடு நடவடிக்கைக்காக கட்டண விகிதங்களை சாலிக் திருத்தியுள்ளது. துபாய் ரைடு நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் ஒரு மாத கால துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் 2025 இன் ஒரு பகுதியாகும்.
இந்நிலையில் துபாய் ரைடின் ஆறாவது பதிப்பின் தொடக்கத்திற்காக ஆயிரக்கணக்கான சைக்கிள் ஓட்டுநர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு ஷேக் சயீத் சாலையில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில் “துபாயில் நடைபெறும் முக்கிய சமூக நிகழ்வுகளின் போது சீரான போக்குவரத்து ஓட்டத்தை ஆதரிப்பதற்கும், அனைத்து சாலை பயனர்களுக்கும் ஸ்மார்ட் மொபிலிட்டி அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் சாலிக்கின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைகிறது” என்று சாலிக் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட கட்டண விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலான நேரங்கள் (peak hours)
காலை 6 மணி முதல் 10 மணி வரை 6 திர்ஹம்ஸ் நிர்ணயிக்கப்படும்
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை: மாலை நேரங்களில் வழக்கமான 6 திர்ஹம்சிற்கு பதிலாக 4 திர்ஹம்ஸ் நிர்ணயிக்கப்படும்.
குறைந்த போக்குவரத்து நெரிசலான நேரங்கள் (low peak hours): காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் அதிகாலை 1 மணி வரை 4 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படும்
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel