ADVERTISEMENT

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட துபாய் ரைடு.. சைக்கிள்களால் நிரம்பி வழிந்த ஷேக் சையத் சாலை..

Published: 2 Nov 2025, 9:12 AM |
Updated: 2 Nov 2025, 9:15 AM |
Posted By: admin

துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் முக்கிய நிகழ்வான துபாய் ரைட் இன்று (ஞாயிற்றுக்கிழமை காலை) பிரம்மாண்டமாக நடந்தேறியுள்ளது. இன்று காலை, குழந்தைகள் கொண்ட குடும்பங்கள் முதல் அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்கள் வரை ஆயிரக்கணக்கான சைக்கிள் ஓட்டுநர்கள், ஷேக் சயீத் சாலையை சக்கரங்கள் மற்றும் வண்ணங்களின் கடலாக மாற்றியுள்ளனர். DP வேர்ல்ட் வழங்கிய துபாய் ரைடின் இந்த ஆறாவது பதிப்பு, துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் 2025 ஐ கண்கவர் பாணியில் தொடங்கி வந்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிகழ்விற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இரண்டு அழகிய பாதைகளில் ரைடர்கள் புறப்பட்டபோது புன்னகை, செல்ஃபிகள் மற்றும் சுழலும் கியர்களின் சத்தம் குளிர்ந்த காலை காற்றை நிரப்பின. இரண்டு பாதைகளில் ஒன்றான டவுன்டவுன் துபாய் வழியாக 4 கிமீ பாதையை குடும்பங்களும் சாதாரண சைக்கிள் ஓட்டுநர்களும் ரசித்தனர், அதே நேரத்தில் அதிக சாகசக்காரர்கள் நகரத்தின் மிகவும் பிரபலமான அடையாளங்களான மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர், துபாய் வாட்டர் கனல் மற்றும் புர்ஜ் கலீஃபா ஆகியவற்றைக் கடந்து 12 கிமீ தூரத்திற்கு பயணித்தனர்.

வேக ஆர்வலர்களுக்கு, துபாய் ரைடு ஸ்பீட் லேப்ஸ் (காலை 5 மணி முதல் காலை 6 மணி வரை) கூடுதல் உற்சாகத்தை அளித்ததாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை சைக்கிள் ஓட்டுநர்கள் திறந்த நெடுஞ்சாலையில் மணிக்கு 30 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல அனுமதித்ததுடன் துபாயின் மையப்பகுதி வழியாக வேகமாகவும் சுதந்திரமாகவும் பயணம் செய்வதற்கான ஒரு அரிய வாய்ப்பையும் வழங்கியது.

ADVERTISEMENT

துபாய் விழாக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனத்தில் (DFRE) DFC இன் மூத்த மேலாளர் யாகூப் அல் சரூனி, இந்த நிகழ்வை ஒரு மாத கால சவாலின் சிறப்பம்சமாகக் கூறினார். அத்துடன் “துபாய் ரைடு ஒரு தனித்துவமான அனுபவம். ஷேக் சயீத் சாலையில் நீங்கள் சைக்கிள் ஓட்டக்கூடிய வருடத்தின் ஒரே நேரம் இது, மேலும் முழு பாதையும் உங்களுக்காக மட்டுமே இன்று ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வையொட்டி குறிப்பிட்ட பகுதிகளில் சாலை மூடல்களும் சாலிக் கட்டணங்களில் மாற்றங்களும் அறிவிக்கப்பட்டன. அத்துடன் இன்று துபாய் மெட்ரோ இயங்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel