ADVERTISEMENT

வாகன ஓட்டிகளுக்கு இரண்டு நாட்கள் இலவச பார்கிங்கை அறிவித்த ஷார்ஜா..

Published: 31 Dec 2025, 4:49 PM |
Updated: 31 Dec 2025, 4:49 PM |
Posted By: admin

ஷார்ஜா குடியிருப்பாளர்கள் புத்தாண்டு தொடக்கத்தில் இரண்டு நாட்கள் இலவச பொது பார்க்கிங்கை பெறலாம். அதாவது ஜனவரி 1, வியாழன் மற்றும் ஜனவரி 2, வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களில் வாகன ஓட்டிகள் பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

ADVERTISEMENT

இந்த விலக்கு நிலையான பொது பார்க்கிங் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். வாரம் முழுவதும் மற்றும் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களில் செயல்படும் ஸ்மார்ட் பார்க்கிங் யார்டுகள் மற்றும் ‘நீல கட்டண பார்க்கிங் மண்டலங்கள் (blue paid-parking zones)’ ஆகியவை இந்த இலவச பார்க்கிங் சலுகையில் சேர்க்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே போல் துபாயின் பொது வாகன நிறுத்துமிடம் ஜனவரி 1, 2026 அன்று இலவசமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இது மல்டி லெவல் வாகன நிறுத்துமிட வசதிகள் மற்றும் அல் கைல் கேட் (N-365) பகுதிகளுக்கு பொருந்தாது. ஜனவரி 2 வெள்ளிக்கிழமை வாகன நிறுத்துமிட கட்டணம் மீண்டும் அமலுக்கு வரும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் அபுதாபி குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் புத்தாண்டு விடுமுறையின் போது பொது வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் டோல் கேட்களை இலவசமாகப் பயன்படுத்தலாம். மவாகிஃப் பார்க்கிங் அமைப்பு மற்றும் டார்ப் டோல் வாயில்கள் 2026 ஜனவரி 1 வியாழக்கிழமை எந்த கட்டணமும் வசூலிக்காது. வழக்கமான கட்டண வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் டோல் கேட் கட்டணங்கள் மீண்டும் வெள்ளிக்கிழமை, 2026 ஜனவரி 2 அன்று மீண்டும் தொடங்கும்.

போக்குவரத்தை எளிதாக்குவதையும் விடுமுறை காலத்தில் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கூடுதல் வசதியை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அபராதங்களைத் தவிர்க்க அடையாளங்களைச் சரிபார்க்கவும், நியமிக்கப்பட்ட இலவச வாகன நிறுத்துமிடங்களில் வாகனம் நிறுத்துவதை உறுதிசெய்யவும் ஓட்டுநர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT