ADVERTISEMENT

அமீரக ஒற்றுமை தினம்: 7 எமிரேட்களிலும் நாளை நடத்தப்படும் ஏர்ஷோ.. இடம், நேரங்கள் வெளியீடு..!!

Published: 16 Jan 2026, 5:55 PM |
Updated: 16 Jan 2026, 5:55 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை (ஜனவரி 17) ஒற்றுமை தினமாக அனுசரிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அமீரகத்தின் ஆயுதப்படைகள் மற்றும் “எமிரேட்ஸ் நைட்ஸ் ஏர் ஷோ (Emirates Knights Air Show)” குழு நாளை (சனிக்கிழமை) பிற்பகல் நாட்டின் பல்வேறு எமிரேட்களில் விமான கண்காட்சிகளை (air show) ஏற்பாடு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரக தலைநகர் அபுதாபியில் இருந்து தொடங்கி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா ஆகிய எமிரேட்கள் வழியாகச் செல்லும் இந்த விமானப் பயணத்தில் பல்வேறு வகையான ஹெலிகாப்டர்கள் மற்றும் ஜெட் விமானங்கள் பங்கேற்பதாக தகவல் கூறப்பட்டுள்ளது.

ஏர் ஷோ நடைபெறும் இடம் மற்றும் நேரங்கள்:

ADVERTISEMENT

அபுதாபி

இடம்: கொடி கம்பம் (சாரியத் அல் ஆலம்)

ADVERTISEMENT
  • ஃபைட்டர் ஜெட் விமானங்கள்: மாலை 4.35 மணி
  • ஹெலிகாப்டர்கள்: மாலை 4.30 மணி

துபாய்

இடம்: JBR பீச்

  • ஃபைட்டர் ஜெட் விமானங்கள்: மாலை 5:20 மணி
  • ஹெலிகாப்டர்கள்: மாலை 4:43 மணி

ஷார்ஜா

இடம்: அல் புஹைரா கார்னிச்

  • ஃபைட்டர் ஜெட் விமானங்கள்: மாலை 5:30 மணி
  • ஹெலிகாப்டர்கள்: மாலை 4:44 மணி

அஜ்மான்

இடம்: அஜ்மான் பீச்

  • ஃபைட்டர் ஜெட் விமானங்கள்: மாலை 5:34 மணி
  • ஹெலிகாப்டர்கள்: மாலை 4:45 மணி

உம் அல் குவைன்

இடம்: கொடி கம்பம் பகுதி

  • ஃபைட்டர் ஜெட் விமானங்கள்: மாலை 5:42 மணி
  • ஹெலிகாப்டர்கள்: மாலை 4:46 மணி

ராஸ் அல் கைமா

இடம்: கார்னிச் அல் கவாசிம்

  • ஃபைட்டர் ஜெட் விமானங்கள்: 6:00 மாலை
  • ஹெலிகாப்டர்கள்: மாலை 4:51

ஃபுஜைரா

இடம்: அம்ப்ரெல்லா பீச்

  • ஃபைடர் ஜெட் விமானங்கள்: மாலை 4:39 மணி
  • ஹெலிகாப்டர்கள்: மாலை 5:04 மணி

ஏர்ஷோ நடத்தப்படும் இடங்களுக்கான வரைபடம்

நாடு ‘ஒற்றுமை தினத்தை’ குறிக்கும் வேளையில், ஜனவரி 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு அமீரகத்தின் தேசிய கீதம் அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் இசைக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் துபாய் பட்டத்து இளவரசருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 17 ஆம் தேதி அனுசரிக்கப்படும் ஒற்றுமை தினம், கடந்த 2022 ஆம் ஆண்டு ஹூதி கிளர்ச்சியாளர்கள் அமீரகத்தின் பொதுமக்கள் உள்கட்டமைப்பு மீதான கொடிய தாக்குதலை நினைவு கூறுகின்றது. 2022 ஆம் ஆண்டில், ஹவுதிகள் அபுதாபியின் முசாஃபா ICAD 3 பகுதியையும் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு கட்டுமான தளத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் மூன்று பெட்ரோலிய டேங்கர்கள் வெடித்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel