இன்றைய தினம் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் தெளிவான முதல் பகுதி அளவு மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும் என்றும், வெப்பநிலை உயர்வு மற்றும் தூசு நிறைந்த வானிலை இந்த வார இறுதி வரையிலும் தொடரும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) கணித்துள்ளது.
இது தொடர்பாக NCM பகிர்ந்துள்ள சமீபத்திய தகவல்களில், நாடு முழுவதும் லேசான முதல் மிதமான காற்று வீசும் என்றும், சில நேரங்களில் காற்றின் வேகம் அதிகரித்து, குறிப்பாக நாட்டின் உட்புறப் பகுதிகளில் புழுதியை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நாட்டின் உட்புறப் பகுதிகளில் வெப்பநிலை 44°C வரை உயரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் நிலவரத்தைப் பொறுத்தவரை, அலைகள் லேசானது முதல் மிதமானது வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அரபிக்கடலில் சில நேரங்களில் கடல் சீற்றமாக மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மட்டுமின்றி, வருகின்ற வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் இதே போன்ற வானிலையே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அப்போது வடகிழக்கு முதல் வடமேற்கு திசையிலிருந்து வீசும் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ. வரை எட்டக்கூடும் என்றும், இரு கடலோரப் பகுதிகளிலும் சில நேரங்களில் கடல் சீற்றமாக மாற வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களை எதிர்நோக்குகையில், வானிலை பெரும்பாலும் தெளிவாகவே இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தூசு நிறைந்த வானிலை தொடர்ந்து நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், கடல் நிலவரம் லேசானது முதல் மிதமானது வரை மாறுபட்டு இருக்கும். குறிப்பாக, ஆழ்கடல் பகுதிகளில் அவ்வப்போது கடல் சீற்றமாகவும் இருக்கக்கூடும் என்று NCM அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel