ADVERTISEMENT

துபாய்: பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் ட்ரோன் மூலம் விரைவில் உணவு டெலிவரி!!

Published: 16 May 2026, 1:16 PM |
Updated: 16 May 2026, 1:16 PM |
Posted By: Menaka

விரைவில், துபாயின் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களுக்கு வரும் பார்வையாளர்கள், உணவு அல்லது பானங்களைப் பெறுவதற்காகத் தங்கள் இடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கும் இடத்திற்கே டெலிவரியைப் பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில், துபாய் முனிசிபாலிட்டியானது, வாடிக்கையாளர்களின் அன்றாட அனுபவங்களை மாற்றியமைக்கும் நோக்கில் கீட்டா ட்ரோன் (Keeta Drone) நிறுவனத்துடன் இணைந்து அமீரகத்தின் பொது இடங்களில் ட்ரோன் விநியோக சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

துபாய் முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள தவல்களின் படி, முதல்கட்ட ட்ரோன் டெலிவரி சோதனைகள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் தொடங்கும் என்றும், பின்னர் படிப்படியாக துபாய் முழுவதும் உள்ள பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், பொது இடங்களுக்குள் இருக்கும் பார்வையாளர்களுக்கு உணவு, பானங்கள் மற்றும் பிற பொருட்களை நேரடியாக டெலிவரி செய்ய ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். இது விநியோகங்களை வேகமாகவும் மேலும் வசதியாகவும் மாற்றும் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

ADVERTISEMENT

துபாய் முனிசிபாலிட்டி பொருத்தமான இடங்களைக் கண்டறிந்து, செயல்படுத்தலை ஒருங்கிணைக்கும். அதே நேரத்தில், கீட்டா ட்ரோன் முன்மொழியப்பட்ட இடங்களை மதிப்பீடு செய்து, ட்ரோன் மூலம் பொருட்களை வழங்கும் இடங்களாக அவற்றின் பொருத்தத்தை ஆராயும். மேலும், வான்வழி விநியோகப் பாதைகளை வடிவமைத்து, செயல்பாடுகளைச் சோதித்து, தொழில்நுட்பத்தின் செயல்திறனை மதிப்பிடும் என்று கூறப்படுகிறது.

ஸ்மார்ட் மொபிலிட்டி மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான நகர்ப்புற சேவைகளில் உலகளாவிய தலைவராக மாறுவதற்கான துபாயின் பரந்த தொலைநோக்குப் பார்வைக்கு இந்தத் திட்டம் ஆதரவளிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

கீட்டா ட்ரோன் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் யினியன் மாவோவின் கூற்றுப்படி, கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் பிற பொது மக்கள் கூடும் இடங்களுக்கு நேரடியாக சேவைகளைக் கொண்டு சேர்ப்பதன் மூலம், “மக்கள் ஏற்கனவே இருக்கும் இடங்களிலேயே அவர்களைச் சந்திப்பதில்” இந்தக் கூட்டாண்மை கவனம் செலுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

மார்ச் 2026 நிலவரப்படி, கீட்டா ட்ரோன் நிறுவனம் ஷென்சென், ஹாங்காங் மற்றும் துபாய் உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே 880,000-க்கும் மேற்பட்ட விநியோகங்களை நிறைவு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி, வசதி, அணுகல் மற்றும் சிறந்த பயனர் அனுபவங்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட எதிர்கால ஸ்மார்ட் சிட்டி ஒருங்கிணைப்புகள் மற்றும் புதுமையான பொது சேவை மாதிரிகளுக்கு இந்த முயற்சி வழிவகுக்கும் என்று துபாய் முனிசிபாலிட்டி கூறியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel