ADVERTISEMENT

அக்டோபரில் திறக்கப்படும் துபாய் மிராக்கிள் கார்டன்: 15-வது சீசன் டிக்கெட் விலை அறிவிப்பு!!

Published: 23 Sep 2026, 1:41 PM |
Updated: 23 Sep 2026, 1:42 PM |
Posted By: Menaka

துபாயின் புகழ்பெற்ற மற்றும் பிரம்மாண்டமான மலர் பூங்காவான துபாய் மிராக்கிள் கார்டன் தற்பொழுது மீண்டும் செயல்படத் தயாராகி வருகிறது. துபாய் மிரக்கிள் கார்டன் (Dubai Miracle Garden) தனது 15-வது சீசனுக்காக அக்டோபர் 8 அன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது வண்ணமயமான மலர் அலங்காரங்கள், கருப்பொருள் சார்ந்த ஈர்ப்புகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கக்கூடிய அனுபவங்களை மீண்டும் கொண்டு வரும் என்று உறுதியளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

புதிய சீசனுக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்பனையில் உள்ளன. மேலும், செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடி (Emirates ID) வைத்திருக்கும் ஐக்கிய அரபு அமீரக (UAE) குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்களுக்கு தள்ளுபடி விலையில் டிக்கெட் வழங்கப்படுகின்றன.

UAE குடியிருப்பாளர்களுக்கு 70 திர்ஹம் முதல் டிக்கெட்டுகள்

UAE குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்களுக்கான நுழைவுக் கட்டணம்:

ADVERTISEMENT
  • பெரியவர்கள்: 70 திர்ஹம்
  • குழந்தைகள்: 50 திர்ஹம்
  • 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள்: இலவசம்

இதற்கிடையில், பூங்காவைச் சுற்றிப்பார்க்க வரும் பொதுப் பார்வையாளர்களுக்கு, டிக்கெட் விலை பெரியவர்களுக்கு 100 திர்ஹம் மற்றும் குழந்தைகளுக்கு 80 திர்ஹம் ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

இவை தவிர, பார்வையாளர்கள் துபாய் மிராக்கிள் கார்டன் மற்றும் துபாய் பட்டாம்பூச்சி பூங்கா (Dubai Butterfly Garden) ஆகிய இரண்டிற்கும் சேர்த்து 140 திர்ஹம் விலையில் ‘காம்போ’ (combo) டிக்கெட்டையும் வாங்கலாம்.

ADVERTISEMENT

மேலே குறிப்பிடப்பட்ட விலைகளில் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

150 மில்லியன் மலர்கள்

இந்த பருவகால ஈர்ப்புத் தளம், பிரம்மாண்டமான மலர் அமைப்புகள் மற்றும் பெரிய அளவிலான காட்சிகளுடன், துபாயின் ஒரு பெரிய பகுதியை மீண்டும் வண்ணமயமான மலர் சொர்க்கமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

150 மில்லியனுக்கும் அதிகமான மலர்களைக் கொண்ட துபாய் மிராக்கிள் கார்டன், இப்பகுதியின் மிகவும் புகைப்படம் எடுக்கப்படும் இடமாகவும், குளிர்ந்த மாதங்களில் பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.

15-வது சீசனில் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள மலர் அலங்காரங்கள் மற்றும் கருப்பொருள் சார்ந்த ஈர்ப்புகள் இடம்பெறும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்த கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பூங்கா அக்டோபர் முதல் மே வரை பருவகால அடிப்படையில் செயல்படுகிறது. இது துபாயின் இதமான குளிர்கால வானிலையில் பார்வையாளர்கள் வெளிப்புற ஈர்ப்புகளை ரசிக்க அனுமதிக்கிறது.

டிக்கெட்டுகளைப் பெறுவது எப்படி?

15-வது சீசனுக்கான டிக்கெட்டுகளை துபாய் மிராக்கிள் கார்டனின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பெறலாம்.

இந்த பூங்கா தனது பிரம்மாண்டமான மலர் அமைப்புகளுக்காக ஏற்கனவே கின்னஸ் உலக சாதனை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், ஒவ்வொரு சீசனிலும் அமீரகக் குடியிருப்பாளர்கள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel