ADVERTISEMENT

துபாயில் குவிந்த உயர்தர வீட்டு வாடகை ஒப்பந்தங்கள்! முதல் 8 மாதங்களில் 6.79 பில்லியன் திர்ஹம் மதிப்பில் பதிவு!!

Published: 24 Sep 2026, 11:09 AM |
Updated: 24 Sep 2026, 11:14 AM |
Posted By: Menaka

2026-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் துபாயில் 1 மில்லியன் திர்ஹம் அல்லது அதற்கும் அதிகமான மதிப்புள்ள 2,046 குடியிருப்பு வாடகை ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ‘fäm Properties’ நிறுவனத்தின் பகுப்பாய்வில் தெரிய வந்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு 6.79 பில்லியன் திர்ஹம் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும், ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை பதிவு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தங்களின் இடைநிலை (median) ஆண்டு வாடகை மதிப்பு 1.35 மில்லியன் திர்ஹம் ஆகும்.

இது குறித்து வெளியான புள்ளிவிபரங்களின் படி, இந்த உயர்தர ஒப்பந்தங்களில் பெரும்பகுதி புதிய வாடகை ஒப்பந்தங்களாகும். இவை மொத்தம் 1,423 ஒப்பந்தங்களைக் (மொத்தத்தில் 69.6 சதவீதம்) கொண்டிருந்தன. மீதமுள்ள 623 ஒப்பந்தங்கள் வாடகை ஒப்பந்தப் புதுப்பித்தல்களாகும்.

ADVERTISEMENT

அத்துடன் புதிய வாடகை ஒப்பந்தங்களுக்கான இடைநிலை ஆண்டு வாடகை 1.30 மில்லியன் திர்ஹமாகவும், புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு 1.50 மில்லியன் திர்ஹமாகவும் இருந்ததாக தரவுகள் கூறுகின்றன.

வில்லாக்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆதிக்கம்

இவற்றில் வில்லாக்கள் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருந்தன. இவை 2.49 பில்லியன் திர்ஹம் மதிப்புள்ள 951 ஒப்பந்தங்களையும், சுமார் 1.12 மில்லியன் திர்ஹம் இடைநிலை ஆண்டு வாடகையையும் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொறுத்தவரை, 2.41 பில்லியன் திர்ஹம் மதிப்புள்ள 531 ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் இடைநிலை ஆண்டு வாடகை 1.40 மில்லியன் திர்ஹமாக இருந்தது.

துபாயின் உயர்தர வாடகைச் சந்தையின் அளவை இந்த புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுவதாக ‘fäm Properties’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஃபிராஸ் அல் மசாதி (Firas Al Msaddi) தெரிவித்துள்ளார். இந்தச் சந்தையானது வில்லாக்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளைத் தாண்டி, பெரிய அளவிலான குடியிருப்புச் சொத்துக்கள் மற்றும் பல்வேறு தங்குமிட வகைகளையும் உள்ளடக்கியுள்ளது.

சந்தையில் ஓராண்டு வாடகை ஒப்பந்தங்களே முன்னிலை

இதுவரை பதிவான ஒப்பந்தங்களில் ஓராண்டு ஒப்பந்தங்களே அதிகம் காணப்பட்டன; இவை 1,353 ஒப்பந்தங்களையும், 1.65 மில்லியன் திர்ஹம் இடைநிலை ஆண்டு வாடகையையும் கொண்டிருந்ததாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

மேலும், இரண்டு ஆண்டு கால ஒப்பந்தங்கள் 299-ஆக இருந்தன (இடைநிலை ஆண்டு வாடகை 800,000 திர்ஹம்). அதேவேளையில், மூன்று ஆண்டு ஒப்பந்தங்கள் 224-ஆக இருந்தன (இடைநிலை ஆண்டு வாடகை 600,000 திர்ஹம்).

அதேபோல், நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கால ஒப்பந்தங்களுக்கான இடைநிலை ஆண்டு வாடகை 390,000 திர்ஹமாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் நீண்ட கால ஒப்பந்தங்களுக்கு ஆண்டு வாடகை மதிப்பு குறைவாக இருப்பதற்குக் காரணம், 1 மில்லியன் திர்ஹம் என்ற வரம்புத் தொகையானது ஆண்டு வாடகையை மட்டும் குறிக்காமல், ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பைக் குறிப்பதே ஆகும்.

முக்கிய சொகுசு வாடகைப் பகுதிகள்

துபாயின் பாம் ஜுமைரா, உயர் மதிப்பு குடியிருப்பு வாடகைகளுக்கான ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. இங்கு 191 ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதன் சராசரி ஆண்டு வாடகை 1.50 மில்லியன் திர்ஹம்ஸ் ஆகும்.

ஜபல் அலி இண்டஸ்ட்ரியல் ஃபர்ஸ்ட் பகுதியில் 204 ஒப்பந்தங்களும், சராசரி ஆண்டு வாடகை 2.05 மில்லியன் திர்ஹம்ஸும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே சமயம், ஹதாயெக் ஷேக் முகமது பின் ரஷீத் பகுதியில் 117 ஒப்பந்தங்கள் சராசரியாக 1.30 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அல் மெர்காத் பகுதியில் 90 ஒப்பந்தங்கள் சராசரியாக 1.25 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே சமயம், முஹைசானா செகண்ட் பகுதியில் 86 ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதன் சராசரி ஆண்டு வாடகை 1.53 மில்லியன் திர்ஹம்ஸ் ஆகும்.

மேலும், திட்ட அளவில், பாம் ஜுமைரா பகுதியில் 106 ஒப்பந்தங்களும், சராசரி ஆண்டு வாடகை 1.70 மில்லியன் திர்ஹம்ஸ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் பகுதியில் 38 ஒப்பந்தங்களும், 1.68 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அல் பராரி பகுதியில் 29 ஒப்பந்தங்களும், 1.30 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவை தவிர, குறிப்பிடப்பட்ட திட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த சராசரி வாடகைகளில் ஒன்றாக, ஜுமைரா ஐலண்ட்ஸ் 1.80 மில்லியன் திர்ஹம்ஸ் சராசரி ஆண்டு வாடகையையும், ஐஎல் ப்ரிமோ 1.95 மில்லியன் திர்ஹம்ஸ் வாடகையையும் பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel