ADVERTISEMENT

அமீரகத்தின் சில பகுதிகளில் நேற்று பெய்த பலத்த காற்றுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை!!

Published: 13 Oct 2026, 11:41 AM |
Updated: 13 Oct 2026, 11:41 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைக்காலம் முடிந்து இலையுதிர் காலம் தொடங்கியுள்ள நிலையில், திங்கள்கிழமை (அக்டோபர் 12) நாட்டின் சில பகுதிகளில் மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற வானிலை நிலவியது.

ADVERTISEMENT

குறிப்பாக, அல் அய்ன் நகரில் திங்கட்கிழமையன்று மின்னல், இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இது நகரின் வழக்கமான வெப்பமான மற்றும் வறண்ட வானிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலை உருவாக்கியது. இந்த மழையினால் சாலைகளில் பார்வைத்திறன் குறைந்ததால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அமீரகத்தின் வானிலை தொடர்பான பதிவுகளை வெளியிடும் ‘ஸ்டார்ம் சென்டர்’ (Storm Centre) நேற்று பகிர்ந்த வீடியோக்களில், அல் வதன் ஸ்ட்ரீட் மற்றும் ஹத்தா சாலையில் வாகனங்கள் மீது மழை கொட்டுவதும், சாலைப் பரப்பில் ஆலங்கட்டி கற்கள் தெறித்து விழுவதும் பதிவாகியிருந்தன. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் வாகனங்களை ஓட்டுவது ஓட்டுநர்களுக்கு சவாலானதாக இருந்தது. அதேசமயம், ராஸ் அல் கைமாவின் ஷவ்கா (Shawkah) பகுதியிலும் மழை பெய்தது.

ADVERTISEMENT

துபாய், ஷார்ஜா மற்றும் அல் அய்ன் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) முன்னதாகவே கணித்திருந்த நிலையில், இந்த மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இதனையடுத்து சில மலைப்பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாய எச்சரிக்கையையும் NCM விடுத்தது. அதில் மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், திடீர் வெள்ள அபாயம் உள்ள இடங்களிலிருந்து விலகி இருக்குமாறும் அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

மேலும் தொடர்ந்து மாறிவரும் வானிலை குறித்து விழிப்புடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதேவேளையில், மழையினால் பார்வைத்திறன் குறையும்போது வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்து, மற்ற வாகனங்களிலிருந்து பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel