ADVERTISEMENT

துபாய் வரும் பயணிகளுக்கு இலவச ஹோட்டல் அறை, 10 கிலோ கூடுதல் பேக்கேஜ்..!! எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அதிரடி..!!

Published: 9 Mar 2021, 5:14 PM |
Updated: 9 Mar 2021, 5:18 PM |
Posted By: admin

துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்பொழுது தனது பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து துபாய்க்கு வரும் பயணிகளுக்கு எமிரேட்ஸ் இரண்டு இரவிற்கு ஹோட்டல் தங்குமிடம், 10 கிலோ வரை இலவச கூடுதல் பேக்கேஜ் மற்றும் சிறப்பு விமான கட்டணங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆண்டு மார்ச் 15 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் துபாய்க்கு பயனம் செய்ய மார்ச் 8 முதல் 28 வரையிலான தேதிக்குள் எகனாமிக் கிளாஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகள் ஒரு இரவு இலவசமாக JW மேரியட் மர்க்விஸ் ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் விமானங்களை முன்பதிவு செய்யும் பிசினஸ் கிளாஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் பயணிகள் தாங்கள் துபாய் வந்த நாளில் இருந்து இரண்டு இரவு இலவசமாக ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து துபாய் பயணிப்பதற்கு எகனாமிக் கிளாஸ்ஸிற்கு ரூ.17,982 (905 திர்ஹம்ஸ்), பிசினஸ் கிளாஸ்ஸிற்கு ரூ.68,996 (3,473 திர்ஹம்ஸ்) மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ்ஸிற்கு ரூ.192,555 (9,700 திர்ஹம்ஸ்) முதல் தள்ளுபடி கட்டணங்களை விமான நிறுவனம் வழங்குகிறது.

ADVERTISEMENT

கூடுதலாக, துபாயில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும் பயணிகளுக்கு எமிரேட்ஸ் நிறுவனம் 10 கிலோ இலவச பேக்கேஜ் அலவன்ஸை வழங்குகிறது.

அது மட்டுமல்லாமல், விமான நிறுவனம் அனைத்து பயணிகளுக்கும் நெகிழ்வான முன்பதிவு விருப்பங்கள் மற்றும் கோவிட் -19 இலவச மல்டி-ரிஸ்க் பயண காப்பீட்டை வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT