ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கெதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது அமீரகம் முழுவதும் குறிப்பிட்ட ஐந்து துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு முறை PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரக அரசு குறிப்பிட்டுள்ள அந்த ஐந்து துறைகளாவன: ஹோட்டல்கள், உணவகங்கள், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் சமூக மற்றும் தனிப்பட்ட நடவடிக்கைகள் என கூறப்படும் சலவை நிலையங்கள், அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிபுணர் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள்.
மேற்கூறப்பட்டுள்ள ஐந்து துறைகளை சேர்ந்தவர்களும் இரு வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் கொரோனவிற்கான தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இந்த சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையானது வரும் மார்ச் 28 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் இந்த ஐந்து பொருளாதாரத் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
View this post on Instagram