ADVERTISEMENT

UAE: வாகன என்ஜினை ஆஃப் செய்யாமல் வாகனத்தை விட்டு வெளியேறினால் 500 திர்ஹம் அபராதம்..!! எச்சரிக்கும் காவல்துறை..!!

Published: 2 Apr 2021, 2:02 PM |
Updated: 2 Apr 2021, 2:11 PM |
Posted By: admin

ஷாப்பிங் செல்லும்போதோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ வாகன என்ஜின்களை ஆஃப் செய்யாமல் வாகனத்தை விட்டு வெளியேறும் வாகன ஓட்டிகளுக்கு அபுதாபியில் இனி 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று  காவல்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் நிலையங்கள் அல்லது ATM களில் தங்கள் வாகன என்ஜின்களை ஆஃப் செய்யாமல் வாகனத்தை விட்டு வாகன ஓட்டிகள் வெளியேறுவது அடிக்கடி வாகனத் திருட்டுக்கு வழிவகுக்கும் என்று அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு காணொளி ஒன்றையும் அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் வாகனத்தை விட்டு வெளியேறும் பொழுது குறிப்பாக அவர்கள் குழந்தைகள் வாகனங்களுக்குள் இருக்கும்போது வாகன எஞ்சின்களை ஆஃப் செய்யாமல் செல்லக்கூடாது என்று போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம் வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

போக்குவரத்து தொடர்பாக 1995 ஆம் ஆண்டின் ஃபெடரல் சட்ட எண் (21) இன் 5 வது பிரிவின்படி, வாகன ஓட்டிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடைசெய்யப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் தங்கள் வாகனங்களை வாகனம் நிறுத்துவதற்கென வடிவமைக்கப்படாத இடங்களில் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், அவர்கள் சாலையின் வலதுபுறம் செல்ல வேண்டும் மற்றும் போக்குவரத்து குறுக்குவெட்டுகள் (traffic crossings), குறுக்கு வழிகள் (crossroads), சரிவுகள் (slopes) மற்றும் திருப்பங்கள் (turns) ஆகியவற்றிலிருந்து வெகு தொலைவில் வாகனத்தை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலையில் வாகன நடமாட்டங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்க வேண்டும் என்றும் ஒருபோதும் வாகனத்தின் என்ஜினை அணைத்து வைக்காமல் தங்கள் வாகனத்தை விட்டு வெளியேறக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT