இந்த வருட ரமலான் மாதத்திற்கான பிறை திங்கள்கிழமை (இன்று) தென்படவில்லை என ஓமானின் பிறை பார்க்கும் கமிட்டி தெரிவித்துள்ளதால், ரமலான் மாத முதல் நாளானது ஏப்ரல் 14 ம் தேதி துவங்குவதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி, ஓமானில் வரும் புதன்கிழமை இந்த வருடத்திற்கான ரமலான் மாதம் துவங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஏப்ரல் 13 ம் தேதி ஷபான் மாதத்தின் கடைசி நாள் என்றும் இந்த வருட ரமலான் மாதமானது 29 நாட்கள் நீடிக்குமா அல்லது 30 நாட்கள் நீடிக்குமா என்பதை பிறை பார்ப்பதை பொறுத்து அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.