ஐக்கிய அரபு அமீரகத்தில் கல்விச் சான்றிதழ்களைப் போலியாகத் தயாரித்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 30,000 திர்ஹாம் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமீரகம் முழுவதும் கல்வித் தகுதிகளின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்காக அதிகாரிகள் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், போலியான அல்லது திருத்தப்பட்ட தகுதிகள் தொடர்பான சந்தேகத்திற்கிடமான குற்றவியல் வழக்குகள் சட்ட நடவடிக்கைக்காக தகுந்த நீதித்துறை அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்படுவதாக உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சகம் (MoHESR) தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வழங்கப்படும் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பதிவுகளைச் சரிபார்ப்பதற்கான தனது அமைப்புகளை இந்த அமைச்சகம் விரிவுபடுத்தியுள்ளது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, 2025-ஆம் ஆண்டில் 178,600 தகுதி சரிபார்ப்புக் கோரிக்கைகள் பெறப்பட்டன, இந்த எண்ணிக்கை செப்டம்பர் 2026 தொடக்கத்தில் 253,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமீரகம் முழுவதும் சான்றிதழ் தொடர்பான சோதனைகள் அதிகரித்த போதிலும், செயலாக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான தகுதிகளுடன் ஒப்பிடும்போது மோசடி வழக்குகள் மிகக் குறைவாகவே இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உயர்கல்வி மற்றும் சமூகக் கல்வி அமைச்சகத்தின் (MoHESR) சட்ட விவகாரங்கள் துறையின் இயக்குநர் அகமது அப்துல்லா அல் ஹம்மாதி அவர்கள் பேசுகையில், கல்வித் தகுதிகளின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பது ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளது என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சந்தேகிக்கப்படும் மோசடி, முறைகேடு அல்லது மாற்றம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட சட்ட நடைமுறைகளின் கீழ் கையாளப்படுகின்றன என்றும், குற்றவியல் குற்றத்திற்கான அறிகுறி இருக்கும்போதெல்லாம் நீதித்துறை அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய வழக்குகளில், அமைச்சகம் நீதி அமைச்சகம், மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் மற்றும் உள்ளூர் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சான்றிதழ் மோசடி என கருதப்படும் நடத்தைகள்
கல்வித் தகுதி மோசடியில் பின்வருவன அடங்கும்:
- முற்றிலும் போலியான சான்றிதழ் அல்லது மதிப்பெண் பட்டியலை உருவாக்குதல்
- உண்மையான தகுதியில் உள்ள தகவல்களை மாற்றுதல்
- சான்றிதழின் உள்ளடக்கத்தை மாற்றும் வகையில் தகவல்களைச் சேர்த்தல் அல்லது நீக்குதல்
- தெரிந்தே போலியான கல்வித் தகுதியைப் பயன்படுத்துதல்
ஆள்சேர்ப்பு அல்லது தொழில்முறை முடிவுகளை எடுக்கும்போது கல்விப் பதிவுகளை நம்பியிருக்கும் வேலையளிப்பவர்கள், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு மோசடியான சான்றிதழ்கள் அபாயங்களை உருவாக்கக்கூடும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
போலி ஆவணங்களுக்கான தண்டனைகள்
குற்றங்கள் மற்றும் தண்டனைகள் மீதான 2021 ஆம் ஆண்டின் கூட்டாட்சி ஆணை-சட்டம் எண் 31-இன் பிரிவு 252-இன் கீழ், அமீரகத்தில் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தைப் போலியாகத் தயாரிப்பதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிகாரப்பூர்வமற்ற ஆவணத்தைப் போலியாகத் தயாரிப்பதற்குச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
மேலும், கல்வித் தகுதிச் சான்றிதழ் போலி ஆவணங்கள் தொடர்பான வழக்குகளில், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 30,000 திர்ஹம்ஸ் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் கல்விச் சான்றிதழ்கள் அல்லது பதிவுகளின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் ஏற்படும்போது, அங்கீகரிக்கப்பட்ட சரிபார்ப்பு வழிமுறைகளைப் பயன்படுத்துமாறு வேலையளிப்பவர்களையும் நிறுவனங்களையும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், சரிபார்ப்புகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் மாற்றுவதற்காக, தனது டிஜிட்டல் சரிபார்ப்பு, கண்காணிப்பு மற்றும் தரவுப் பகிர்வு அமைப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்தும் என்று உயர்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சகம் (MoHESR) தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel